சினிமா

தமிழ் திரையுலகில் Come back கொடுத்த பின்னணி பாடகி சின்மயி..!!

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் அறிமுகமான பின்னணி பாடகி சின்மயி அடுத்தடுத்து ஹிட் பாடல்களை கொடுத்து திரை இசையில் மேஜிக்கல் வாய்ஸ் சிங்கர் என்று அனைவரையும் கிரங்கடித்தவர்.

ஹரிஸ் ஜெயராஜ் தேவா என பல முன்னணி இசையமைப்பாளர்களிடம் ஆஸ்தானப் பாடகியாகவும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் விளங்கிய சின்மயி 2018 ஆம் ஆண்டு வைரமுத்துவின் மீது Mee Too புகார் அளித்திருந்தார். இந்த விஷயம் தமிழ் சினிமாவில் பூதாகரமாக வெடித்தது. இதனை எடுத்து டப்பிங் யூனியனில் முறையாக சந்தா செலுத்தாத காரணத்திற்காக பாடகி சின்மயியை தடை செய்தார் டப்பிங் யூனியன் தலைவரும் நடிகருமான ராதாரவி.

Chinmayi Sripada says she will slap Vairamuthu next time she sees him- The  Week

இதனை அடுத்து கடந்த ஐந்து வருடங்களாக சின்மயி தமிழ் திரைப்படங்களில் டப்பிங் கொடுப்பது மற்றும் பாடல் பாடுவது போன்ற பணிகளை மேற்கொள்ளாமல் இருந்தார். இதனிடையே சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மேடையில் பின்னணி பாடகி சின்மயி முத்தமழை பாடலை பாடி அரங்கத்தையே அதிர வைத்தார்.

ரசிகர்கள் அனைவரும் வி வாண்ட் சின்மயி என்று ஆரவார கோஷத்தை எழுப்பினர். பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு தற்போது சின்மயி டி. இமானின் இசையில் கே எஸ் அதியமானின் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு திரைப்படத்திற்கு பாடலை பாடியுள்ளார். இதுகுறித்து டி. இமான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றே படிக்கட்டுள்ளார். அதில் Back to creating magic with the ever soulful A melodious that’s close to my heart என்று ஹைலைட் செய்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button