பீட்ரூட் இலையில் இவ்வளவு நன்மைகளா?

பீட்ரூட்டில் எவ்வளவு சத்துக்கள் இருக்கோ அதே அளவிற்கு அளப்பறிய நன்மைகள் அதன் கீரையிலும் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?. பொட்டாசியம், போரான், மெக்னீசியம், சோடியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், பீட்டைன், வைட்டமின் C, போன்ற எண்ணற்ற சத்துக்கள் பீட்ரூட் கீரையில் நிறைந்துள்ளது.
குளிர்ச்சி தன்மை நிறைந்த பீட்ரூட் கீரை, சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் போன்ற சூடு கோளாறுகள் நீங்குவதுடன், சிறுநீர் பெருக்கியாகவும் பயன்படுகிறது. இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் வீக்கம், கண் அழற்சி, புற ஊதா கதிர்களின் தாக்கத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். கண் இமைகள் மீது பீட்ரூட் சாற்றை தடவினாலும் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
வளரும் குழந்தைகளுக்கு பீட்ரூட் கீரை கொடுத்தால், எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடையும். பீட்ரூட் கீரையில் கலோரிகள் குறைவு, எனவே உடல் எடையைக் குறைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். பீட்ரூட் கீரையில் நிறைந்துள்ள கால்சியம், வைட்டமின் K சத்துக்கள் ரத்தம் உறைவதற்கும், புதிய செல்களை உருவாக்குவதற்கும் உதவுகிறது.
பீட்ரூட் இலைகள், ரத்த சர்க்கரையை குறைக்கிறது. கல்லீரலை சுற்றி படிந்திருக்கும் கொழுப்பையும் கரைத்து வெளியேற்றுகிறது. அஜீரண குறைபாட்டை சரி செய்யக்கூடியது. இனி கடைக்கு போய் பீட்ரூட் வாங்குனீங்கன்னா, மறக்காமல் கீரையோட சேர்த்து வாங்குங்க.