
சோசியல் மீடியாவுல அப்பப்போ ஏதாவது ஒண்ணு ட்ரெண்ட் ஆகுறது வழக்கம். அந்த வகையில இப்போ உலகத்துலேயே குட்டி காரின் போட்டோஸ் வைரலாகிட்டு இருக்கு. இது காரா? இல்ல வாழைப்பழத் தோலா அப்படின்னு கேட்குற அளவுக்கு சைஸ்ல ரொம்ப ரொம்ப குட்டியா இருக்குற காரை ஹோண்டா சிவிக் காரை மாற்றி வடிவமைச்சியிருக்காங்க.
தைவான் ஆட்டோ ஷோவுல இந்த காரை காட்சிப்படுத்தியிருக்காங்க. இந்த காருல சீட், டையர் எதுவும் கிடையாது. ஆனா டிரைவர் படுத்துக்கிட்டே, விண்ட்ஷீல்டுக்குப் பதிலாக கேமராக்களை பார்த்து காரை ஆப்ரேட் பண்ண முடியுமாம்.
சில மில்லி மீட்டர்கள் மட்டுமே நகரக்கூடிய இந்த விநோத காரை லான் டோங் தலைமையிலான ஸ்டான்ஸ் கேரேஜ் தைவான் குழு உருவாக்கியிருக்கு. சோசியல் மீடியாவுல வைரலாகிட்டு வர்ற இதோட போட்டோஸை பாக்குற நெட்டிசன்கள், இது காரா நான் ஏதோ கார் தரையில புதைச்சியிருக்குன்னு நினைச்சேன்னு கமெண்ட் பண்ணிட்டு இருக்காங்க.
சில ஆண்டுகளுக்கு முன்னாடி, 2023 ஆம் ஆண்டில், பாதியாக வெட்டப்பட்டு மாற்றியமைக்கப்பட்ட ஃபியட் பாண்டா உலகின் மிகக் குறைந்த உயரமுள்ள கார் என்ற பட்டத்தை வென்றது. இத்தாலிய நிறுவனமான கார்மகெடனால் உருவாக்கப்பட்ட இது, இந்த சாதனைக்காக கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பிடித்தது.