அட திருட்டு பயலே… ஸ்கூட்டரை ஆட்டையைப் போட்ட காளை… வைரல் வீடியோ
வீட்டு வாசலில் அக்கடான்னு நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டரை காளை ஒன்று அக ஸ்மார்ட்டாக ஆட்டையைப் போட்டுக்கொண்டு செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் என எந்த சோசியல் மீடியா பக்கம் சென்றாலும் சரி, விலங்குகளின் அலப்பறை வீடியோக்களுக்கு அளவில்லை.
தற்போது வீட்டு வாசலில் அக்கடான்னு நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டரை காளை ஒன்று அக ஸ்மார்ட்டாக ஆட்டையைப் போட்டுக்கொண்டு செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வீடியோவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் காளைக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. திடீரென அங்கிருந்த வீட்டு வாசல் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டி மீது தனது இரண்டு முன்னங்கால்களையும் வைத்து தள்ளிக்கொண்டெ செல்கிறது.
கிட்டத்தட்ட 100 மீட்டர் தள்ளிக்கொண்டு போய் சுவற்றில் முட்டுக்கொடுத்து அந்த ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அங்கிருந்து, எதுவுமே செய்யாதது போல் அமைதியாக கிளம்பிச் செல்கிறது.
இணையத்தில் தாறுமாறு வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள், “தல டேட்டுக்கு (Dating) தயார் ஆகுறதுக்காக ஸ்கூட்டியை சுட்டிருப்பாரு போல, ஆனா எதிர்ல ஓனர் வந்ததைப் பார்த்து மெர்சலாகி விட்டுட்டு போறாரு” என கலாய்த்து வருகின்றனர்.