பிரபல நடிகர் வீட்டில் இறப்பு செய்தி – துயரத்தில் சினி உலகம்
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் இன்று காலை 10.30 மணி அளவில் உயிரிழந்தார்

நடிகர் கவுண்டமணி மனைவி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.
90’s கிட்ஸ்களின் ஃபேவரைட் காமெடியனாக திகழ்ந்தவர் கவுண்டமணி.செந்திலுடன் இணைந்து கலக்கிய கவுண்டமணி பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
1970ஆம் ஆண்டு வெளிவந்த ராமன் எந்தன் ராமனடி படத்தின் மூலம் சிறிய கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார்.கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக திரைத்துறையில் கோலோச்சியுள்ளார்.கவுண்டமணி இன்றளவும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
இவர் நடித்த கரகாட்டக்காரன் படத்தின் காமெடி காலம் கடந்தும் பேசப்பட்டு வருகிறது.
கவுண்டமனிக்கு கடந்த 1963ஆம் ஆண்டு சாந்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இருவருக்கும் செல்வி ,சுமத்ரா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் இன்று காலை 10.30 மணி அளவில் உயிரிழந்தார்.
மனைவியை இழந்துவாடும் கவுண்டமணிக்கு திரையுலகினர் உட்பட பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.