வைரல்

மணப்பெண்ணாக மாறிய கும்பமேளா அழகி மோனலிசா -வெளியான வீடியோவால் ரசிகர்கள் ஷாக்

மோனலிசாவின் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், கும்பமேளாவில் பாசி மணி விற்ற மோனலிசா போன்சலேவா இது என வாயைப் பிளக்கின்றனர்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமே பிரம்மாண்ட முறையில் நடந்து முடிந்தது. நாடு முழுவதும் இருந்து சாதுக்களும் முனிவர்களும் குவிந்தனர் கும்பமேவில் பூ ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்த இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே என்ற பெண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

சிவப்பு நிற உடையில் இளம் பெண் சாது போல வலம் வந்த மோனலிசா ஒட்டுமொத்த சோசியல் மீடியாவின் கவனத்தையும் ஈர்த்தார். உடனே அவரை பாலிவுட் படத்தில் நடிகையாக்குவதாகக்கூறி சனோஜ குமார் மிஸ்ரா என்ற இயக்குநர் பாலியல் வழக்கில் கைதானதால் மோனலிசாவின் பாலிவுட் கனவு மண்ணோடு, மண்ணானது.

இதனை எண்ணி, எண்ணி மோனலிசா கண்ணீர் வடிக்கும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இதனிடையே பாலிவுட் கதவு அடைபட்டாலும், மோனலிசாவிற்கு மாடலிங் கதவு திறந்திருக்கிறது. மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மொஹ்சினா அன்சாரி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ சோசியல் மீடியாவில் பட்டையைக் கிளப்பி வருகிறது. எம்ரால்டு நகைகள், சிவப்பு நிற Bridal லெஹங்காவில் மணப்பெண்ணாகவே மாறி ஜொலிக்கிறார்.

அசத்தல் மேக்கப் மற்றும் கிராண்ட் உடையில் தேவதையாய் ஜொலிக்கும் மோனலிசாவின் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், கும்பமேளாவில் பாசி மணி விற்ற மோனி போன்சலேவா இது என வாயைப் பிளக்கின்றனர். இன்னும் சிலரோ அவரது காந்த கண் அழகு பிரபல மாடல்களுக்கே சவால் விடும் அளவுக்கு வசீகரத்துடன் இருப்பதாக புகழ்ந்து தள்ளுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button