சூப்பர் ஸ்டார் வீட்டில் தங்க வாய்ப்பு… ஆனா ஒருநாள் வாடகை இவ்வளவாம்?

தமிழ் சினிமாவிற்கு எப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோ, அதேபோல் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மம்முட்டி. இவருக்கு ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு நடிகர் மம்முட்டியின் வீட்டில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் செலவிடக்கூடிய சூப்பா கான்ஸ் அவரோட ரசிகர்களுக்கு கிடைச்சியிருக்கு. ஆனா, சும்மா இல்லீங்க பணம் கட்டி. உடனே மம்மூட்டி அவ்வளவு பெரிய பண கஷ்டத்துல இருக்காரான்னு நினைச்சிடாதீங்க. நடிகர் மம்முட்டி பல வருஷம கொச்சி பனம்பிள்ளி நகரின் கே.சி. ஜோசப் சாலையில் வசித்து வந்தார். இந்தப் பகுதி மலையாள சினிமாவின் பிரபலங்கள் பலரும் வசிக்கக் கூடிய பகுதியாகும். அங்கிருந்து மம்முட்டி இப்போது எர்ணாகுளத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.
பனம்பிள்ளி நகரில் உள்ள அவரது தனித்துவமான பங்களாவின் முன் ரசிகர்கள் அடிக்கடி புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். இப்போது, இந்த பங்களா ரசிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது. கொச்சியின் பனம்பிள்ளி நகரில் உள்ள கொச்சியின் கே.சி. ஜோசப் சாலையில் உள்ள ‘மம்மூட்டி ஹவுஸ்’ இல்லத்தை விகேஷன் எக்ஸ்பீரியன்ஸ் என்ற நிறுவனம் சுற்றுலா பயணிகளுக்கான நட்சத்திர விடுதியாக மாற்றியுள்ளது.
பங்களாவில் நான்கு படுக்கையறைகள் உள்ளன. பிரைவேட் தியேட்டர், கேலரி உள்ளிட்ட இடங்களும் உள்ளன. மேலும் ஒரு நாள் தங்குவதற்கான வாடகை 75,000 ஆயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் முன்பதிவுகள் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். பல ரசிகர்கள் மம்முட்டியைப் பார்க்க ஆர்வமாக தங்களுக்கு ஒரு ரூமை போட்டு வைப்போம் என ரூமை புக் செய்கிறார்களாம். ஆன மம்மூட்டியை பார்த்த எல்லாம் சான்ஸே இல்ல, அவர் வசித்த வீட்டில் தங்கி என்ஜாய் செய்து கொள்ளுங்கள் என ஒட்டல் மேனேஜ்மென்ட் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த லக்கரி ஒட்டலில் தங்கும் வசதிகள் தொடங்கப்படவுள்ளன. மதியம் 2 மணிக்கு செக் இன் செய்தால் மறுநாள் காலை 11 மணிவரை தங்கிக் கொள்ளலாம் தங்கிக் கொள்ளலாம்