வைரல்

நயனின் 100 கோடி ரூபாய் வீட்டில் இத்தனை வசதிகளா?

லேடி சூப்பர் ஸ்டார் அப்படிங்கிற பட்டம் எனக்கு வேண்டான்னு சொல்லி பரபரப்பைக் கிளப்புனதுக்கு அப்புறமா?. (அந்த பட்டம் அவங்க வீட்டுக்காரர் விக்னேஷ் சிவன் கொடுத்தது, ரசிகர்கள் கொடுக்கலங்குற பஞ்சாயத்து எல்லாம் வேற டாபிக்..) நடிகை நயன்தாரா இப்ப மறுபடியும் சோசியல் மீடியாவோட டாக்கா மாறியிருக்காங்க. கிட்டத்தட்ட 15 வருஷமா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தின்னு ஒட்டுமொத்த சினிமா உலகத்தையும் கலக்கிட்டு வர்ற நயன், ரீசன்ட்டா சென்னையில் 100 கோடி ரூபாய்க்கு சொகுசு பங்களா வாங்கியிருக்காங்க. அதுவும் நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயனோட இப்ப சிக்கல்ல இருக்குற தனுஷ் ஆகியோர் எல்லாம் தங்கியிருக்குற போயஸ் கார்டன் ஏரியாவுல, செம்ம பாசான லக்சரி ஹவுஸை வாங்கியிருக்காங்க.

Step inside Nayanthara and Vignesh Shivan's 7,000 square ...

7000 சதுர அடி பரப்பளவுல பரந்து விரிஞ்சி இருக்குற, மொத்தம் 3 ப்ளோர் இருக்குற ஆடம்பர வீட்டுல, ஒரு தளத்தையே முழுக்க ஸ்டுடியோவிற்காக ஒதுக்கியிருக்காங்களாம். அடுத்த 2 ப்ளோரையும் நவீன வசதிகள் மற்றும் ஸ்டைலிஷ் இன் டீரியர் வொர்க் பண்ணியிருக்காங்களாம்.

சினிமாவை மிஞ்சுற அளவுக்கு தோட்டத்தையும், வீட்டோட இன்டீரியரையும் டீசைன் பண்ணி அசத்தியிருக்காங்க. இன்னொரு பக்கம் இது வீடா மியூசியமான்னு அசத்து போற அளவுக்கு பழங்காலத் தாழி போன்ற பழம் பொருட்கள் மற்றும் கலைநயம் மிகுந்த பொருட்களைக் காண முடிகிறது. காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி ஊடுருவும் வகையில் கட்டமைப்போடு வீட்டை உருவாக்கி இருக்கின்றனர்.

முதல் தளத்தில் கணவர், மகன்களுடன் நயன்தாரா வசிக்கிறார். 2வது தளத்தில் குழந்தைகள் விளையாடுவதற்குத் தனி அறை என கண்கவர் கனவு இல்லமாகக் கட்டி இருக்கிறார் நயன்தாரா. தற்போது வீட்டின் மொட்டை மாடியில் பல லட்சங்களைக் கொட்டி நயன்தாரா தனக்குன்னு ஒரு தனி ஆபீஸை ரூமை கட்டிக்கிட்டு இருக்காங்களாம். இது எதுக்குன்னு பாத்தீங்கன்னா, கதை கேட்குறதுக்காக கூட பசங்களையும், கணவனையும் விட்டு பிரிஞ்சிப் போகக்கூடாதுங்கிறதுக்காக இந்த ஏற்பாடாம். இதோட ஸ்பெஷல் நியூஸ் என்னன்னா, இந்த வீட்டை நயன் தன்னோட லவ்வஃபுல் ஹஸ்பெண்ட் ஆன விக்னேஷ் சிவனுக்கு வெட்டிங் டே கிப்டா வாங்கிக் கொடுத்திருக்காங்களாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button