அரசியல்

இந்து மதம் வேறு – பாஜகவினரின் மதம் வேறு! மமதா பானர்ஜி காரசார புகார்!

பாஜக போலியான இந்து மதத்தை இறக்குமதி செய்துள்ளதாக மமதா பானர்ஜி விமர்சித்துள்ளார். மத்தியில் மோடி அரசு தடுமாற்றத்தில் இருப்பதாகவும் எப்போது வேண்டுமானலும் கவிழும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், முஸ்லீம் எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் இருந்து தூக்கி எரியப்படுவார்கள் என பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Mamata slams Suvendu's 'Muslim MLAs will be thrown out' remark, accuses BJP of importing 'fake Hinduism'

இது தொடர்பாக மமதா பானர்ஜி பேசியுள்ளதாவது, மத்திய ஏஜென்சிகளை தவறாக வழி நடத்துகின்றனர். சிபிஐ, அமலாக்கத்துறை, யார் வீடுகளில் ரெய்டு நடத்த வேண்டும், யாரை கைது செய்ய வேண்டும் என்ற உத்தரவுகள் அவ்வப்போது பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகின்றன.எங்களது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒழுக்கமான கட்சி. ஆனால் பாஜகவினரான நீங்கள் மதத்தின் பெயரால், கொலை, வெட்டு, அகற்று போன்ற கொள்கைகளை போதிக்கின்றீர்கள். உண்மையில் நீங்கள் பின்பற்றுவது இந்து மதம் அல்ல. போலியான மதத்தை இந்து மதம் என்று சொல்லி திணித்து வருகின்றீர்கள்.
உங்களால் மணிப்பூரை ஒழுங்காக ஆட்சி செய்ய முடியவில்லை. இந்த லட்சணத்தில், மேற்கு வங்காளத்தில் ஆட்சிக்கு வர துடித்துக் கொண்டிருக்கின்றீர்கள். இவ்வாறு பேசியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button