பணிவால் உயர்ந்த விராட் கோலி! ஷமியின் தாயாரின் காலில் விழுந்து ஆசிர்வாதம்!

முகமது ஷமியின் தாயாரின் காலை தொட்டு வணங்கிய விராட் கோலியின் செயல்பாட்டை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்திய அணி வென்றதை அனைவரும் உற்சாகமாக கொண்டாடிய வேளையில், விராட் கோலி, முகமது ஷமியின் தாயாரை பார்த்த, விராட் கோலி, அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். பிறகு, அவரது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.இதனை புகழ்ந்துள்ள நெட்டிசன் ஒருவர், தனது செயல்பாடுகளால் புதிய இந்தியாவின் தூதர் என்ற பெயரை பெற்றுள்ளார் இந்த சாம்பியன் வீரர். வீரத்தை காட்ட வேண்டிய இடத்தில் வீரத்தை காட்டுவார்.
பணிவை காட்ட வேண்டிய இடத்தில் பணிவை காட்டுவார். உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம் என பதிவிட்டுள்ளார்.இதே போல் நீண்ட நாட்களுக்கு பிறகு, விராட்கோலி, தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் வீரர் ஹர்சித் ரானாவும் உள்ளார். அனுஷ்கா சர்மா லண்டனில் வசித்து வரும் நிலையில், மீடியா வெளிச்சம் தங்களது குழந்தைகள் மீது படாமல் இருப்பதற்காக, இந்த நிகழ்ச்சிக்கு அவர்களை அழைத்து வரவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.