வேட்டையன் பாட்டுக்கு ஆடிய மோனாலிஷா! டைமன்ட் நெக்லஸ், கர்லிங் ஹேர்! ஆளே மாறிப் போனார்!

கேரளாவைச் சேர்ந்த நகைக் கடை அதிபர் பாபி செம்மனூர். இவர் அண்மையில் நடிகை ஹனி ரோஸ் என்பவர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் விடுதலையான இவர், தற்போது, தனது இழந்த புகழை மீட்பதற்காக, நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார்.அதில் தன்னை கேரளாவே திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதற்காக, கும்பமேளா பிரபலம் சிறுமி மோனாலிஷா போன்ஸ்லேவை அழைத்து வந்துள்ளார். அங்கு மேடையில் வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாட்டுக்கு டேன்ஸ் ஆடி ரசிகர்களை ஈர்த்தார்.முன்னதாக மலையாளத்தில் சில வார்த்தைகளை பேசி அனைவரையும் கவர்ந்தார்.
அவர் உடுத்தியிருந்த டைமன்ட் நெக்லஸ் மற்றும் மேக்கப் அவரை பாலிவுட் நடிகைபோல் காட்டியது. மோனாலிஷாவின் சில AI புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், கேரள நிகழ்ச்சியில் தனது இயற்கை அழகால், AI படங்களுக்கே டப் கொடுக்கும் வகையில் காட்சியளித்தார்.இந்த கேரள விசிட்டிற்கு அவர் 15 லட்சம் ரூபாய் சம்பளம் மற்றும் 2 பவுன் நகை பரிசாக பெற்றதாக கூறப்படுகிறது. வழக்கமாக தனது கடை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களுக்கு தொழில் அதிபர் பாபி செம்மனூர் 2 பவுன் நகையை கூடுதல் பரிசாக வழங்குவார் என கூறப்படுகிறது.