இறைத்தூதரின் வழித்தடங்கள் – சவுதி அரேபியாவின் புதிய திட்டம்!

இறைத்தூதர் நபிகள் நாயகம், மக்காவில் இருந்து மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்த பாதையை வரலாற்று நினைவிடமாக மாற்றும் வகையில் இறைத்தூதரின் வழித்தடம் என்ற புதிய திட்டத்தை சவுதி அரேபியா உருவாக்கி வருகிறது.
மக்காவில் இருந்து மதினாவுக்கு இறைத்தூதர் சென்ற சுமார் 470 கிலோ மீட்டர் பாதையில் 41 இடங்களில் நிறுத்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.உகத் மலைப்பகுதியில் இந்த திட்டத்தை இளவசரர் சல்மான் பின் சுல்தான் தொடங்கி வைத்தார்.
இந்த புதிய திட்டத்தின்படி, அந்த குறிப்பிட்ட பாதையில் செல்ல விரும்புபவர்கள் சுமார் 305 கிலோ மீட்டர் தூரம் நடந்தே பயணிக்கலாம். செல்லும் வழிகளில் 41 இடங்களில் வரலாற்று நினைவிடங்கள் இருக்கும்.
அந்த இடங்கள் நபிகளார் அமர்ந்த, ஓய்வெடுத்த இடங்களாக இருக்கும் எனத் தெரிகிறது.5 இடங்களில் விளக்க மையங்கள் அமைக்கப்படுகிறது. அங்கு வழித்தடம் பற்றிய முக்கிய கூடுதல் விபரங்கள் பயணிகளுக்கு விளக்கப்படும். ஹிஜ்ரத் தொடர்பான விபரங்களை காட்சி படங்களாக தெரிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகம் அந்த பாதையில் அமைக்கப்படுகிறது. செல்லும் பாதைகளில் கடைகள், உணவு விடுதிகள் அமைக்கப்படுகிறது.இந்த திட்டத்தின் மூலம் சவுதி அரேபியாவின் பாரம்பரியத்தை உலக மக்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.