சங்கீதாவின் சொக்க வைக்கும் சொத்து மதிப்பு!

நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா பற்றிய தகவல்கள் அதிகம் அறியப்படாதவை. அதனை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.இலங்கை தமிழரான சொர்ணலிங்கம் என்பவரின் மகள் சங்கீதா. இலங்கையில் பிறந்தனர். பின்னர் இவர்களது குடும்பம் லண்டனுக்கு குடிபெயர்ந்துள்ளது. சொர்ணலிங்கம் பெரும் தொழிலதிபர் ஆவார். சங்கீதா இலங்கையில் பிறந்தாலும் லண்டனில் வளர்ந்துள்ளார். நடிகர் விஜயின் தீவிர ரசிகையான அவர், படப்பிடிப்பு தளத்தில் அவரைச் சந்தித்துள்ளார்.விஜயை விட 2 வயது மூத்தவர் சங்கீதா.
3 ஆண்டுகள் இருவரும் காதலித்த நிலையில், பெற்றோரின் சம்மதத்தின் அடிப்படையில் இவர்களின் திருமணம் நடந்துள்ளது.அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருந்த போதிலும், சங்கீதாவும் தனது தந்தை வழியாக பெரும் கோடீஸ்வரியாகவே இருந்துள்ளார். அவர் பெயரில் பல சொத்துக்கள் முன்பே இருந்துள்ளன. அவரது தற்போதைய சொத்து மதிப்பு 400 கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.விஜய் சங்கீதா தம்பதிக்கு 2 குழந்தைகள். மகன் ஜாசன் அமெரிக்காவிலும் மகள் திவ்யா ஷாஷா லண்டனில் படிக்கின்றனர். மகளுக்கு உதவியாக சங்கீதா லண்டனில் தங்கியுள்ளார்.