கணவரின் தலையை கம்பி வளையத்தால் மூடிய மனைவி? என்ன காரணம் தெரியுமா?

துருக்கியை சேர்ந்தவர் இப்ராஹிம். இவரிடம் உள்ள ஒரு தீய பழக்கம் புகைப்பிடித்தல். ஒன்று இரண்டு அல்ல ஒரு நாளைக்கு 2 பாக்கெட் சிகரெட்டுகளை புகைப்பாராம். குடும்பத்தினரும், மருத்துவர்களும், எவ்வளவோ சொல்லியும், கேட்காமல் தொடர்ந்து புகைத்து வந்துள்ளார்.புகைப்பழக்கதை விடுவதற்கு அவரும் எவ்வளவோ முயன்றும் பலன் இல்லை. உதாரணமாக புத்தாண்டு, பிறந்த நாள், திருமண நாளில், இனி புகை பிடிப்பதில்லை என சபதம் எடுப்பாராம். ஆனால், அந்த சபதம் சில நாட்களை கூட தாண்டாதாம்.இந்தச் சூழலில் தான் இவரது மனைவி, எப்படியாவது, தனது கணவரின் இந்த பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். அப்போது, அவரது சிந்தனையில் உதயமானது தான் இந்த ஐடியா.
தனது கணவரை, வெல்டிங் ஒர்க் ஷாப்பிற்கு அழைத்துச் சென்று, அவரது தலை, கழுத்து, ஆகியவற்றை அளவெடுத்து, அதற்கு ஏற்றார் போல், ஒரு இரும்பு வளையத்தை உருவாக்க சொல்லியுள்ளார்.இந்த இரும்பு வளையத்தில் உள்ள ஓட்டை வழியாக, ஸ்ட்ரா மூலம் அவர் ஜுஸ் குடித்துக் கொள்ளலாம். சாப்பிடும் நேரம் வரும் போது, அந்த இரும்பு வளையத்தின் பூட்டை திறந்து சாப்பிட்டு கொள்ளலாம். அந்த பூட்டின் சாவி, அவரது மனைவியிடம் மட்டுமே இருக்கும். இப்படியாக அந்த பெண் தனது கணவரின் புகைப் பழக்கத்தை ஒழிக்க மேற்கொண்ட புதிய முயற்சி உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது.புகையிலை சார்ந்த நோய்களால் வருடத்திற்கு 80 லட்சம் மக்கள் உலகம் முழுவதும் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது.