இந்தியா

லக்கி காருக்கு இறுதிச்சடங்கு செய்த குஜராத் குடும்பம் – வைரல் வீடியோ!

தாங்கள் செல்லமாக வளர்க்கும் நாய், பூனை போன்ற பிராணிகளுக்கு வளைகாப்பு நடத்தும் வீடியோ வைரலாகி பார்த்திருப்போம். ஆனால் குஜராத்தில் ஒரு குடும்பம் தங்களுக்கு அதிர்ஷ்டமான காருக்கு இறுதிச்சடங்கு நடத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் அதிர்ஷ்டம் என்பது பெரும்பாலானோரால் நம்பக்கூடியது. வீட்டிற்கு ஒரு புதிய பொருள் வந்தாலோ அல்லது மருமகன், மருமகள், குழந்தை பிறந்தாலோ அந்த சமயத்தில் நடக்கும் நல்ல விஷயத்திற்கு அவர்களின் அதிர்ஷ்டம் தான் காரணம் என நம்பப்படுகிறது. குறிப்பாக வாகன விஷயங்களில் அப்டேட்டாக பல கார், பைக்குகளை வாங்கினாலும் சிலர் சென்டிமெண்ட்டாக தாங்கள் வாங்கிய முதல் கார் அல்லது பைக்கை விற்கமாட்டார்கள். ஏனென்றால் அது அதிர்ஷ்டமான வண்டி அது வந்த பிறகு தான் வாழ்வில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டது எனக்கூறுவார்கள். அப்படியொரு எமோஷனல் பாண்டிங் அந்த கார் அல்லது டூவிலர் மீது ஏற்பட்டு விடும்.

அப்படிப்பட்ட உணர்ச்சி போராட்டத்தின் உச்சகட்ட சம்பவம் தான் குஜராத் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆம், குஜராத்தைச் சேர்ந்த விவசாய குடும்பம் ஒன்று தங்களது பழைய காருக்கு இறுதிச் சடங்கு செய்துள்ளனர். இந்த கார் தங்களது வாழ்க்கையில் வந்த சாதாரண விவசாய குடும்பம் கோடீஸ்வராக ஆனதாக நம்புகிறார்கள். இதனால் 12 ஆண்டுகள் பழசான தங்களது வேகன் ஆர் காரை அவர்களது மதத்தின் படி சடங்குகளைச் செய்து புதைத்துள்ளனர்.

அம்ரேலி மாவட்டம் லத்தி தாலுகாவில் உள்ள பதர்சிங்க கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் பொல்லாரா குடும்பத்தினர் தங்களது லக்கி காரை ஸ்கிராப் செய்ய விரும்பாமம், தங்களது வயலிலேயே 15 அடி ஆழத்திற்கு குழி தோண்டி புதைத்துள்ளனர். இதற்காக 4 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதோடு, காரின் இறுதி ஊர்வலத்தில் 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இதுமட்டுமின்றி, இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு ருசியான இரவு உணவையும் விவசாயி குடும்பத்தினர் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button