உறவை துண்டித்த நிகரகுவா

மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா, இஸ்ரேல் உடனான அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்துள்ளதோடு, இஸ்ரேலை இனப்படுகொலை செய்யும் பாசிச நாடு என்று விமர்சித்திருக்கிறது.இடதுசாரி பின்புலத்தைக் கொண்ட நிகரகுவாவின் அதிபர் டேனியல் ஒர்டேகா இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலை கடுமையாக விமர்சித்து வருகிறார்.இதன் நீட்சியாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி இஸ்ரேல் உடனான எல்லா விதமான உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளார்.
மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவாவுடன் இஸ்ரேலுக்கு பெரிய அளவிலான தொடர்பு இல்லாத போதிலும், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலை செயலை கண்டிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.இதற்கு முன்பு 1982லும், 2010லும் நிகரகுவா இஸ்ரேல் உடனான உறவை துண்டிப்பதாக அறிவித்திருக்கிறது.இதனால் நிகரகுவா தலைநகரில் இஸ்ரேலின் தூதரகம் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.