இந்தியா

சொகுசு அறைக்கு மாதக் கட்டணம் வெறும் ரூ.15. கரண்ட் பில் வெறும் ரூ.4

மருத்துவம் படிக்கும் மாணவி ஒருவர் தனது கல்லூரியின் விடுதியை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். தனி அறை, கட்டில், மெத்தை, பேன், கப்போர்ட், தனி கழிவறை போன்ற சொகுசு விடுதிக்கு இணையான இண்ட்டீரியர்கள் உள்ளன. பால்கனியில் இருந்து இயற்கை அழகை ரசிக்க முடியும். இப்படிப்பட்ட நவீன விடுதிக்கு மாதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா? வெறும் 15 ரூபாய் தான். அது மட்டுமல்ல, 24 மணி நேரமும், மின்சாரத்தை பயன்படுத்தினாலும் கூட அதற்காக மாதம் வெறும் 4 ரூபாய் கட்டினால் போதுமானது. அத்துடன் முடியவில்லை இது வெறும் டிரெய்லர் தான்.
மெயின் பிக்சர் என்னவென்றால், அந்த மருத்துவக் கல்லூரியில் 4 ஆண்டு படித்து முடிப்பதற்கு, வருடத்திற்கு வெறும் 5586 ரூபாய் கட்டினால் போதுமானது. படித்த முடித்த பிறகு, உங்களை வேலைக்கு எடுப்பதற்கு உள்ளூர் மருத்துவமனைகள் முதல், உலக மருத்துவமனைகள் வரை தயாராக இருப்பார்கள். அந்த அளவிற்கு இந்தியாவிலேயே தரத்தில் முதலிடத்தில் உள்ள கல்லூரி.

சரி இவ்வளவு தரமான கல்வியை இவ்வளவு குறைந்து விலையில் எப்படித் தர முடியும் என்று கேள்வி எழுலாம். அதற்கான பதில் எளிது. நீங்கள் கட்டும் பணம் தான் குறைவே தவிர, உங்களுக்கு மொத்தமாக செலவாகும் தொகை என்பது 4 வருடத்திற்கு 1 கோடியே, 70 லட்சம் ரூபாய்.சரி இந்தப் பணத்தை அந்தக் கல்லூரிக்கு யார் தருவார்கள் என்பது உங்கள் அடுத்த கேள்வியாக இருக்கும். வேறு யாரும் அல்ல. இந்திய அரசு அந்தப் பணத்தை மானியமாக வழங்கிவிடும்.
சரி அப்படிப்பட்ட கல்லூரியின் பெயர் என்ன, அதில் எப்படி சேர்வது என்பது உங்கள் கேள்வியாக, இருக்கும். அந்த கல்லூரியின் பெயர் வேறு ஒன்றும் அல்ல, உங்களுக்கு நன்கு தெரிந்த எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவக் கல்லூரி தான். இப்போது உங்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும். இவ்வளவு சலுகைகளை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்றால், நீங்கள் நீட் தேர்வில் இந்திய அளவில் முன்னணி மதிப்பெண்களை பெற வேண்டும். அங்கு தான் வைக்கப்பட்டுள்ளது செக்…

நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது என்பதே குதிரை கொம்பாக உள்ள நிலையில், அதில் அகில இந்திய அளவில் எப்படி முதலிடங்களை பிடிப்பது என்ற கவலை உங்களுக்கு ஏற்பட்டால், அந்தச் சலுகை உங்களுக்கானது அல்ல.
போதிய வசதி, வாய்ப்புகள், பயிற்சி நிறுவனங்களுக்கான கட்டணம் செலுத்தக் கூடியவர்களால் மட்டுமே நீட்டில் சாதிக்க முடியும் என்று கூறப்படுவதால், இந்த வாய்ப்புகள் எளியர்களுக்கு கிட்டுவது கடினம்.ஏற்கனவே போதிய அளவில் பணம் படைத்தவர்களே, தேர்விலும் சாதிக்கின்றனர். அவர்களுக்கே இந்தச் சலுகைகளும் எளிதில் கிடைக்கின்றன.
இந்த கல்லூரி விடுதி தொடர்பான வீடியோவை வெளியிட்டவர் ஜார்கண்டில் உள்ள தியோகர் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஆவார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button