ரூ. 3 லட்சம் கோடி சொத்து மதிப்பு! இந்தியாவின் நம்பர் 1 கோவில்!

சச்சின் டெண்டுல்கர் ஓரு ஆண்டுக்கு 1300 கோடி அதிகபட்சமாக சம்பாதித்துள்ளார். விராட் கோலி 1000 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். ஆனால் திருப்பதி பாலாஜி 4411 கோடி ரூபாய் கடைசி நிதியாண்டில் உண்டியல் வருமானம் பெற்றுள்ளார் என டெக்கான் ஹெரால்டு பத்திரிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவின் நம்பர் 1 பணக்கார கோவிலான திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸ், நெஸ்லே, பஜாஜ் பின்ஸ்செர்வ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை விட திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு அதிகம்.திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த நிதியாண்டில் பக்தர்கள் மூலமாக வந்த ஓராண்டு வருமானம் 4411 கோடி ரூபாய்.திருப்பதி தேவஸ்தானத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய்.
அடுத்ததாக பிக்ஸ்டு டெபாசிட் மூலம் அதிக வருமானம் கிடைக்கிறது. அடுத்ததாகத்தான் உண்டியல் வருமானம். அதற்கு பிறகு லட்டு வருமானம். இதில் வருடத்திற்கு 150 கோடி ரூபாய் வருமானம் பக்தர்களின் முடி காணிக்கை மூலம் கிடைக்கின்றது என்பது தான் சுவாரஸ்யம்.
திருப்பதி பாலாஜியின் பெயரில் 11,225 கிலோ தங்கம் பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. விக்ரகத்திற்கு சூட்டப்படும் தங்க நகைகளின் எடை மட்டும் 1088 கிலோ. வெள்ளி நகைகள் 9071 கிலோ.
வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தங்கத்தின் மூலமாக வட்டி மட்டுமே 1200 கோடி ரூபாய் வருடத்திற்கு கிடைக்கிறது.திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் 6000 ஏக்கர் நிலம் உள்ளது. 7636 ஏக்கரில், 75 இடங்களில், அசையா சொத்துக்கள் உள்ளன. 1226 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 6409 ஏக்கர், விவசாயம் சாராத நிலம் உள்ளது.
இந்தியா முழுவதும் 71 கோவில்கள், திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து இயக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக 535 சொத்துக்கள் உள்ளன இதில் 159 சொத்துக்கள் லீசுக்கு விடப்பட்டுள்ளன.இன்னும் 169 சொத்துக்களை லீசுக்கு விடுவதற்கான பணிகள் நடைபெறுகின்றன.திருப்பதி தேவஸ்தானத்துக்கு 307 திருமண மண்டபங்கள் சொந்தமாக உள்ளன. இதில் சுமார் 200 மண்டபங்கள், லீசுக்கு விடப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது.