வைரல்

எந்த மதத்தினர் அதிகமாக மது அருந்துகின்றனர்?

மது அருந்துவதில் முன்னணியில் இருக்கும் மதத்தினர் யார்…
எந்த மதத்தினர் குறைவாக மதுப் பழக்கம் கொண்டுள்ளனர்…
ஒரு விழிப்புணர்வு பதிவு…

தேசிய குடும்ப நல சர்வே 2019 – 2021 வெளியிட்டுள்ள தகவலில், எந்த மதத்தினர் அதிகமாக மது அருந்துகின்றனர் என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மது அருந்துவதில் முதல் இடத்தில் உள்ளனர். சுமார் 28 சதவீதம் பேர் மது அருந்துகின்றனர்.
2வதாக புத்த/ நியூ புத்த மதத்தினர் 24.5 சதவீதம் பேர் மது அருந்துகின்றனர்.
3வதாக சீக்கியர்கள் 23.5 சதவீதம் பேர் மது அருந்துகின்றனர்.
4வதாக இந்துக்களில் 20 சதவீதம் பேர் மது அருந்துகின்றனர்.
5வதாக ஜன மதத்தினரில் 5.9 சதவீதம் பேர் மது அருந்துகின்றனர்.
கடைசியாக முஸ்லீம்களில் 5 சதவீதம் பேர் மது அருந்துகின்றனர்.

சாதி அடிப்படையில் அதிகமாக மது அருந்தும் பிரிவினராக பட்டியல் பழங்குடியினர் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 36 சதவீதம் பேரும், பெண்களில் 6 சதவீதம் பேரும் மது அருந்துகின்றனர்.
ஒட்டு மொத்த இந்தியாவின் மது நுகர்வில் தமிழ்நாட்டின் மது நுகர்வு 13 சதவீதமாக உள்ளது. அதாவது இந்தியா முழுவதும் மது அருந்தும் 100 பேரில், 13 பேர் தமிழ்நாட்டில் இருந்து மது அருந்துகின்றனர்.

தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் கேஸ் மது விற்பனையாகின்றன. தோராயமாக 48 லட்சம் பாட்டில்கள் விற்பனையாகின்றன. இதே போல் தோராயமாக 21 லட்சம் பாட்டில் பீர் விற்பனையாகின்றது.
மதுவால் ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

மதுக் குடிக்கும் காட்சிகள் இடம்பெறாத திரைப்படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து திரைப்படங்களிலும், மது அருந்தும் காட்சிகள் இடம்பெற்று, அந்தப் பழக்கம் பிரமோட் செய்யப்படுவதும், சாதாரணமான குற்றமற்ற செயலாக சித்தரிக்கப்படுவதும், வருங்கால சந்ததிகளை எங்கு கொண்டு நிறுத்தப் போகின்றது எனத் தெரியவில்லை.


====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button