சினிமா
110 கோடி வர்த்தகம் – தங்கலான் புதிய சாதனை!

150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட தங்கலான் திரைப்படம் விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தது. எனினும் ரசிகர்களின் டிக்கெட் கட்டணத்திற்கு அந்த படம் நட்டத்தை விளைவிக்கவில்லை. 2 வாரங்களை கடந்துள்ள தங்கலான், 3வது வார விடுமுறையில் மேலும் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், தங்கலான் உலக அளவில் 75 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக ஓடிடி உரிமத்தை பெற்ற நெட்பிளிக்ஸ் அதற்காக 35 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது. எனவே தற்போது, வரை தங்கலான் 110 கோடி ரூபாய் வர்த்தகம் ஆகியுள்ளது.தொலைக்காட்சி உரிமம், இணையதள உரிமம் உள்ளிட்ட மேலும் சில உரிமங்கள், திரையரங்கு வசூல் ஆகியவை மூலம் 150 கோடி வர்த்தகத்தை தாண்டி, வர்த்தக ரீதியில் வெற்றிப்படமாக உருவெடுக்கும் என நம்பப்படுகிறது.