நெதன்யாகுவின் வீட்டை படம் பிடித்த ஹிஸ்புல்லா ஆள் இல்லா விமானம்: இஸ்ரேல் ஊடகம் செய்தி!

நெதன்யாகுவின் வீட்டை படம் பிடித்த ஹிஸ்புல்லா ஆள் இல்லா விமானம்…
இஸ்ரேல் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு…
ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சிசேரியா இல்லத்திற்கு மேல் பறந்த ஹிஸ்புல்லாவின் ஆள் இல்லா உளவு விமானம், வீட்டை படம்பிடித்துள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் பரபரப்பு செய்தியை ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வெளியிட்டுள்ளன.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இஸ்ரேல் ராணுவம், நெதன்யாகுவின் இல்லத்திற்கு மேல் சந்தேகத்திற்குரிய வகையில் சில பொருட்கள் பறந்தது உண்மை என்றும் ஆனால் அது ஹிஸ்புல்லாவின் ஆள் இல்லா விமானம் அல்ல எனத் தெரிவித்துள்ளனர்.
அது பறவைக் கூட்டமாகவோ, அல்லது, பொருளாக இருந்திருக்கலாம் என்றும், கண்காணிப்பு கருவிகள், தவறுதலாக அவற்றை டிரோன் என அடையாளம் கண்டு, தவறான எச்சரிக்கை ஒலியை எழுப்பி விட்டதாக கூறியுள்ளன.
எனினும் இதற்கு முன்பு, Hoopoe என்ற பெயரில் இஸ்ரேலின் முக்கிய ராணுவத் தளங்களை படம் பிடித்து, வீடியோ தொகுப்புகளாக ஹிஸ்புல்லா வெளியிட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இஸ்ரேல் பிரதமரின் வீட்டை அவர்கள் படம் பிடித்துள்ளார்களா என்ற சந்தேகம் இஸ்ரேல் அரசியல்வாதிகளை உலுக்கியுள்ளது.
===