உலகம்

300 நாட்களை கடந்தும் எதிர்போர் புரியும் பாலஸ்தீன குழுக்கள்!

ஆக்ரோஷ தாக்குதல் - வீழாத போராளிகள்

இஸ்மாயில் ஹனியே மறைவிற்கு பிறகும், தொடரும் எதிர்ப்பு போர்…

இஸ்ரேல் படைகள் மீது அடுக்கடுக்கான தாக்குதல்கள்…

வீடியோக்களுடன் விபரங்களை பட்டியலிட்டுள்ள பாலஸ்தீனிய அமைப்புகள்…

காசா மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் தாக்குதல் 303வது நாளை எட்டியுள்ளது. 40 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 1 லட்சம் பேர் காயம் அடைந்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டுள்ளார். இவ்வளவு பின்னடைவுகளை சந்தித்தும் கூட, பாலஸ்தீனிய போராளிக்குழுக்கள் இஸ்ரேலிடம் இன்னும் சரணடையவில்லை. தங்களது எதிர்ப்பு தாக்குதல்களை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இஸ்ரேல் தனது கைதிகளை மீட்க முடியாமல் போராடி வருகிறது.  இஸ்ரேலுக்கு எதிரான போரை பாலஸ்தீன குழுக்கள் வெற்றிகரமாக நடத்தி வருவதாக செய்திகள் உறுதி செய்துள்ளன.

வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பாலஸ்தீன குழுக்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை எதிர்த்து Rafah, Khan Younis, மற்றும் Netzarim Axis.  பகுதிகளில் பல அதிரடி தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ரபா நகரின் கிழக்கு பகுதியான சலாடா பகுதியில் ஆக்கிரமிப்பு படைகளுடன், மிக குறுகிய தூரத்தில் நேருக்கு நேர் நின்று சண்டையிட்டதாக ஹமாசின் அல் கஸ்ஸாம் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த போரில், ஆக்கிரமிப்பு படைகளின் 2 கவச வாகனங்கள், 2 D9 புல்டோசர், ஒரு மெர்க்காவா டாங்கி ஆகியவற்றை யாசின் 105 ராக்கெட்டுகள் மூலம் தகர்த்ததாக ஹமாசின் ராணுவ பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த அல்லது கொல்லப்பட்ட ஆக்கிரமிப்பு வீரர்களை எடுத்துச் செல்வதற்காக, ஆம்புலன்ஸ்  ஹெலிக்காப்டர்கள் அங்கு வந்தததாகவும் ஹமாஸ் கூறியுள்ளது.

மேலும் ரபாவின் கிழக்கு கல்லறை பகுதியில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு வீரர் ஒருவரை, Ghoul sniper rifle மூலம் குறிபார்த்து சுட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் ரபா நகரத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் அமைத்துள்ள Soufa military site மீது 114 mm Rajum rockets கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் நெட்ரிசன் காரிடர் எனப்படும் வடக்கு காசாவின் காசாசிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் தற்காலிக ராணுவ முகாமை குறிவைத்து, இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு mortar shells தாக்குதல் நடத்தியுள்ளது.

இதே போல் கான் யூனிஸ் பகுதியில் அந்த அமைப்பு Thaqeb grenade ஆயுதம் மூலம் இஸ்ரேலின் ராணுவ வாகனத்தை தகர்த்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

இதே போல் al-Nasser Salah al-Din  என்ற போராளிக்குழு, நெட்ரிசம் ஆக்சிஸ் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு இஸ்ரேல் நிலைகளை நோக்கி, Haseb missile மற்றும் mortar shells மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதே போல், இஸ்ரேலில் உள்ள நாகல் ஓஸ் ராணுவ தலைமையகம் மீது, அல் அக்ஸா தியாகிகள் படை, அல் அன்சார் பிரிகேட்ஸ போன்ற போராளிக்குழுக்கள்  artillery ,  missile fortification operation என்ற பெயரில் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அறிவித்துள்ளனர்.

 

முன்னதாக இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அடையாள தாக்குதலாக, 20க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு வீசியுள்ளது. இதன் மூலம் அந்த அமைப்பின் ராக்கெட் வீசும் திறன் இன்னும் முழுமையாக அழிக்கப்படவில்லை என்பதை காட்டியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button