உலகம்

அம்பானியிடம் கூட இல்லாத கார்! உலகில் 3 நபர்களிடம் மட்டுமே உள்ளது!

உலகின் மிக விலை உயர்ந்த காரை அறிமுகம் செய்துள்ள ரோல்ஸ் ராய்ஸ்…
ஆர்டர் செய்தால், கிடைக்க 4 வருடங்கள் ஆகும்…
இந்த ஒரு காரின் விலையில், 4500 புதிய மாருதி ஆல்டோ கார்கள் வாங்கலாம்…

ஆடம்பரம், செல்வம், கவுரவம் இது தான் ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் முத்திரை. எவ்வளவு தூரம் வசதிகளை அதிகப்படுத்தி, விலையை உயர்த்த முடியும் என்பது தான் இந்த நிறுவன அதிகாரிகளின் முக்கிய ஆராய்ச்சியாக இருக்கும்.
அந்த வகையில் உலகிலேயே விலை உயர்ந்த கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். இதன் மாடல் பெயர் Rolls Royce Boat Tail இதன் விலை 234 கோடி ரூபாய்.

classic yachts அதாவது பாய்மரப் படகின் வடிவமைப்பில் இருந்து, இந்த கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது. twin-turbo 6.75-liter, V12 engine பவர் கொண்டது. ஏற்கனவே ரோல்ஸ் ராய்ஸ் அறிமுப்படுத்திய பாண்டம் கார்களும் இதே வசதியைக் கொண்டவை. ஆனால் அவை விலை குறைவு.

The Story Behind Rolls-Royce's New $28 Million Hand-Built Boat Tail

இந்த கார்களுக்கு ஏன் இவ்வளவு விலை என்றால், அதற்கான காரணம் சொல்கிறார். சுமார் 1800 பிரத்யேக உதிரி பாகங்கள் இந்த காரில் இணைக்கப்பட்டுள்ளன. காரின் கலரில் இருந்து ஒவ்வொரு வசதியும் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்பதை கேட்டு, பிறகே தயாரிப்பை தொடங்குகின்றனர். இதனால் ஒரு காரை உருவாக்க 4 ஆண்டுகள் ஆகின்றது.

காரின் விண்ட் ஸ்கீரின், ஸ்பீட் போட்களை பிரதிபலிக்கிறது. காரின் பயன்படுத்தாத பின்புறம் கூட, டேஸ்போர்டுகளைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. மது பாட்டில்களை சேமிப்பதற்காக 2 கூலர்களும், champagne எனப்படும் மதுக்கடை அமைப்பும் இந்த காரில் உள்ளது.

4 இருக்கைகள் மட்டுமே உள்ள நிலையில், அவற்றை தற்காலிக டைனிங் ஹாலாகவும் மாற்றிக் கொள்ளலாம்.
மடித்து வைக்கக் கூடிய டேபிள்கள், பின்னால் அமர்பவர்களுக்கு குடை ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த கார்கள் 3 மட்டுமே தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு காரும் மற்றொன்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

Take A Look At The Back Of World's Most Expensive New Car, $28M Rolls-Royce  Boat Tail

ஒரு காரை ராப் பாடகர் Jay-Z மற்றும் அவரது மனைவி பாப் ஐகான் Beyonce ஆகியோர் வாங்கியுள்ளனர்.
மற்றொரு காரை அர்ஜென்டினா கால்பந்து வீரர் Mauro Icardi வாங்கியுள்ளார். மற்றொரு உரிமையாளரின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் விலை 234 கோடி ரூபாய். அதே நேரம் நம் இந்தியாவில் நடுத்தர மக்கள் பயன்படுத்துவதற்கு 4 லட்சம் ரூபாய் முதல், மாருதி ஆல்டோ கார்கள் உள்ளன. சராசரியாக 5 லட்சம் ரூபாய்க்கு ஒரு மாருதி ஆல்டோ கார் வாங்கினால் கூட, சுமார் 4680 கார்கள் வாங்கி விடலாம்.
===

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button