உலகம்

இஸ்ரேலை அங்குலம் அங்குலமாக படம் பிடித்த ஹிஸ்புல்லா உளவு விமானம்!

இஸ்ரேலை அங்குலம் அங்குலமாக படம் பிடித்த ஹிஸ்புல்லா உளவு விமானம்…
ஐயன் டோமிற்கு மீண்டும் ஒரு முறை படுதோல்வி…
ராணுவ அதிகாரிகளின் வீடு உள்ளிட்ட முக்கிய தகவல்களை வெளியிட்டு திகில்…

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாவின் ஆள் இல்லா விமானம் பறந்து சென்று இந்த காட்சிகளை HIGH RESOLUTION உடன் படம் பிடித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த காட்சிகளை தொகுத்து 8 நிமிட வீடியோவாக ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், வடக்கு இஸ்ரேலின் Ramat David Airbase எனப்படும் விமானப் படைத் தளம் பற்றிய தகவல்களை ஹிஸ்புல்லா அள்ளியுள்ளது.

ராணுவ போர் விமானங்கள் எங்கு நிறுத்தி வைக்கப்படும். போக்குவரத்து ஹெலிக்காப்டர்கள் எங்கு நிறுத்தி வைக்கப்படும். ஆம்புலன்ஸ் விமானங்கள் எங்கு நிறுத்திவைக்கப்படும், கடல் கண்காணிப்பு ஹெலிக்காப்டர்கள் எங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன, எலெக்ட்ரானிக் போர் கருவிகள் எங்கு வைக்கப்பட்டுள்ளன, போன்ற விபரங்கள் இடம் பெற்றுள்ளன.

அதிலும் குறிப்பாக, அந்த படைத்தளத்தில் பணியில் உள்ள மூத்த ராணுவ அதிகாரிகள் யார், யார், அவர்களது அலுவலகங்கள் எங்கு உள்ளன, மேலும் ஐயன் டோம் எங்கு உள்ளது, வெடி மருந்துகள் எங்கு தேக்கி வைக்கப்பட்டுள்ளன போன்ற முக்கிய விபரங்களை வெளியிட்டு, இஸ்ரேலுக்கு திகில் கொடுத்துள்ளது.

ஹிஸ்புல்லாவை பொருத்தவரை இஸ்ரேலை கடந்த 10 மாதங்களாக வடக்கு புறத்தில் இருந்து தாக்கி வருகிறது. காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தும் வரை தங்களது தாக்குதல் தொடரும் எனத் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லாவின் ஆள் இல்லா விமானங்கள் இஸ்ரேலில் குண்டு மழை பொழிவதோடு, அவ்வப்போது, உளவு விமானங்கள் அனுப்பப்பட்டு, தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதனை தடுக்க முடியாமல், அவ்வப்போது, இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்புகள் தோல்வி அடைந்து வருவதும் தெரியவந்துள்ளது. Ramat David Airbase, என்பது வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரே ஒரு ராணுவ வான்படைத் தளமாகும். இது லெபனான் எல்லையில் இருந்து 46 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு இதுபோன்ற உளவு விமானங்கள் மூலம் 2 முறை, இஸ்ரேலை படம் பிடித்து, ஹிஸ்புல்லா வெளியிட்டது. தற்போது, 3வது முறையாக ஆள் இல்லா விமானம் மூலம் இஸ்ரேல் உளவு பார்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button