தங்கம் மீதான வரி குறைப்பு – கிடுகிடுவென குறையும் தங்கம் விலை! முதலீடு செய்தவர்கள், அடகு வைத்தவர்கள் கவலை!

தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்து, ஒன்றிய அமைச்சர் நிர்மலா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் தங்கம் விலைகள் கிடுகிடுவென சரியத் தொடங்கியுள்ளன.
22 கேரட் தங்கம் 8 கிராம், அதாவது ஒரு பவுண் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. 24 கேரட் தங்கம் 10 கிராம், 4200 ரூபாய் வரை குறைந்துள்ளது. வெள்ளி 2000 ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. இதே போல் பிளாட்டினம் மீதான சுங்க வரி 6.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி விலை குறைப்பு, தங்கத்தை முதலீட்டிற்காக வாங்கி வைத்துள்ளவர்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதே போல், வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்கள், உடனடியாக குறிப்பிட்ட தொகையை செலுத்தி, இழப்பை சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஏலம் போவதற்கு வாய்ப்புள்ளது.
அதே நேரம் புதிதாக தங்கம் வாங்குபவர்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்பவர்களுக்கு இது பலனைத் தரும் எனத் தெரிகிறது. இதே போல் இந்த விலைக்குறைப்பு பற்றி முன்னரே அறிந்து வைத்தவர்கள், யூகத்த நகை வியாபாரிகள் இருந்திருந்தால், அவர்கள் காட்டில் இப்போது மழை தான்.
அவர்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை முழுவதுமாக விற்பனை செய்து விட்டு, தற்போது, வாங்கிக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் தங்க கடன் வழங்கும் வங்கிகளுக்கு தற்போது, கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. தங்க கடன் பெற்ற வாடிக்கையாளர்களிடம் இழப்பீட்டை சரி செய்ய கூடுதல் தொகையை வசூலிக்க வேண்டும்.
====