நடிகை சுகன்யாவின் மகளா இது? அவரே கொடுத்த விளக்கம்!

நடிகை சுகன்யாவின் மகள் என்று கூறி சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ…
யார் இந்த இளம்பெண்… சுகன்யா கொடுத்துள்ள விளக்கம்…!
சின்னக் கவுண்டர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில், முன்னணி நடிகை அவதாரம் எடுத்த சுகன்யா, ஒருக் காலக்கட்டத்தில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், வரிசை கட்டி காத்திருக்கும் நிலையை உருவாக்கி வைத்திருந்தார்.
பெயர், பணம், புகழ், அந்தஸ்து என கொடிகட்டி பறந்த அவர் தற்போது, 54 வயதில் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரது புகைப்படம் ஒன்று வைரலாக பரவிய நிலையில், அந்த படத்தில் இருக்கும் இளம்பெண் தான் சுகன்யாவின் மகள் என்ற செய்தியும் பரவியது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சுகன்யா, அது தனது மகள் அல்ல. தனது சகோதரியின் மகள் என கூறியுள்ளார்.
அமெரிக்க தொழில் அதிபரை திருமணம் செய்த சுகன்யா, ஓராண்டில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். அதற்கு பிறகு 2வது திருமணம் செய்யாமல், திரைத்துறையிலும் அதிகம் தலைக் காட்டாமல் தனிமையிலேயே வாழ்ந்து வருகிறார். தற்போது, அவருக்கு வயது 54.
ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக, சுறுசுறுப்பாக வலம் வந்தவர், இன்றைய இளம் தலைமுறையினருக்கு அடையாளம் தெரியாத நபராக மாறியுள்ளது சோகம்.
தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஊடகங்களிடம் அதிகம் விவாதிக்காதவர் சுகன்யா என்பதும் குறிப்பிடத்தக்கது.
====