இந்தியா

படிப்பை தொடர்ந்து நடிப்பு – பாலிவுட்டில் கால் பதிக்கும் சச்சின் மகள் சாரா!

பாலிவுட்டில் களமிறங்கப்போகும் சச்சின் டெண்டுல்கரின் மகள்…
கல்லூரி படிப்பை முறையாக முடித்துவிட்டு, நடிப்பில் கவனம்…

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜுன் தந்தையின் வழியில் கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ளார். இந்நிலையில், அவரது 26 வயது மகள் சாரா சச்சின், பாலிவுட்டில் களமிறங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கான தீவிர நடிப்பு பயிற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் கேரவான் வாகனம் ஒன்றின் அருகே அவர் இருக்கும் புகைப்படம் வெளியானது. சாரா சச்சின் லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவ மேல்படிப்பை முடித்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவத்துறையில் தொடராமல் நடிப்பில் ஆர்வம் காட்டி வருவது தெரியவந்துள்ளது. அவர் விரும்பியதை செய்து கொள்ளலாம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையொட்டி சில விளம்பர படங்களில் நடிக்க கையெழுத்திட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, விரைவில் பாலிவுட் படங்களிலும் அவர் நடிப்பார் என தெரியவந்துள்ளது. ஸ்டார் குழந்தையான சாராவை குறிவைத்து, பல சர்ச்சைகள், அவதூறுகள் வட்டமடித்துள்ளன.

சாரா டெண்டுல்கர் தனது சகோதரன் அர்ஜுன் டெண்டுல்கருடன் உள்ள புகைப்படத்தை மார்பிங் செய்து, கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்லுடன் இருப்பது போன்று பதிவிட்டு, அவரை காதலிப்பதாக அவதூறு பரப்பினர்.

அவர் சிறுமியாக இருந்த போதே பல அவதூறுகள் றெக்கை கட்டிப் பறந்தன. தற்போது, திரைத்துறையில் அவர் களம் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button