இந்தியன் 2 – மொக்கைப் படம் 100 கோடி வசூலை தாண்டியதா?

இந்தியன் 2 திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டியதாக தகவல்…
படத்தின் பட்ஜெட் 150 கோடி…. நடந்தது என்ன?
இந்தியன் 2 திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், 3 நாட்களில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியுள்ளதாக, தனியார் சினிமா டிக்கெட் கணக்கீட்டு இணையதளமான சக்னிக் செய்தி வெளியிட்டுள்ளது. இதுபற்றி பார்க்கலாம்.
முதல் நாளில் இந்தப் படம் இந்தியா முழுவதும் சுமார் 25 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 18.20 கோடி ரூபாயும், 3ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை 15.35 கோடி ரூபாயும் வசூலை ஈட்டியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் 3 நாட்களில் 59.15 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது.
அதே நேரம் வெளிநாடுகளில் சுமார் 40 கோடி ரூபாயை இந்த படம் வசூலித்ததாக அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியதாக சொல்லப்பட்டாலும் படத்தின் பட்ஜெட் 150 கோடி ரூபாய் ஆகும். எனவே இன்னும் ஒரு வாரம் கழித்த பிறகே, இந்த படம் வணிக ரீதியாக வெற்றிப் படமா என்பது தெரியவரும்.
====