இந்தியாவைரல்

நாங்க கூப்பிடும் போது, வராத நீ, ஆனந்த் கூட தெருவில் இறங்கி ஆடலாமா? ரஜினியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஆனந்த் அம்பானியுடன் ஆட்டம்!
தெருவில் இறங்கி குத்திய ரஜினி!
நாங்க கூப்பிடும் போது, கேட் ட தாண்டி வரலையே தலைவா என நெட்டிசன்கள் கிண்டல்…

நடிகர் ரஜினிகாந்த் ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொண்டு, தெருவில் நின்று குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதனை நெட்டிசன்கள் பரப்பி, பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும், உங்களை பார்க்க உங்கள் வீட்டு வாசலுக்கு வரும் ரசிகர்களை இதுபோன்று நேரில் சந்தித்து இருக்கின்றீர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

கேட்டுக்கு வெளியே நாற்காலி போட்டு ஏறி நின்று தரிசனம் தரும் தலைவன், இன்று அம்பானி வீட்டு கல்யாணத்தில் இவ்வளவு கூட்டத்தில் இறங்கி ஆடுகின்றார் என வேறு ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அம்பானி குடும்ப கல்யாணத்தில் பங்கேற்ற முக்கிய நடிகர்களுக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கைக் கடிகாரம் வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், சிலர், தலைவரின் ஆட்டம் இதுக்காகத் தானா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

பல நடிகர்களும் ஆடிய நிலையில், ரஜினி கூட்டத்தோடு கூட்டமா நின்று ஆடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
===

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button