புராணங்களில் கூறப்படும் வாசுகி பாம்பு? குஜராத்தில் பிடிபட்டதா? உண்மையில் நடந்தது என்ன ?

47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய பாம்பின் படிமம் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கட்ஜ் பகுதியில் உள்ள பனந்த்ரோ நிலக்கரி சுரங்கத்தின் அருகே தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
அப்போது ராட்சத அளவிலான படிமப்பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
முதலில் அது முதலை இனமாக இருக்கலாம் என யூகிக்கப்பட்டது.
பின்னர் ஆராய்ச்சி நடத்திய IIT ரூர்கியை சேர்ந்த டெபாஜித் தத்தா, சுனில் பாஜ்பாய் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் படிமப்பொருளின் 27 எலும்பு பாகங்கள் ஒன்றோடொன்று தொடர்புடையது என கண்டறிந்தனர்.
மேலும் அந்த படிமம் 47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராட்சத பாம்பின் படிமம் என உறுதிப்படுத்தினர்.
இதுகுறித்து Scientific Report எனும் தளத்தில் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள அந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த பாம்பு சுமார் 50 அடி நீளம் மற்றும் 1000 கிலோ எடை கொண்டதாக இருந்திருக்கலாம் எனவும் தங்களது கட்டுரையில் குப்பிட்டுள்ளனர்.
முழுமையான படிமம் கிடைக்காததால் இதன் சரியான நீளம் தெரியவில்லை.
அதீத வெப்பத்தின் காரணமாக குஜராத்தின் கடற்கரை ஓர சதுப்புநிலங்களில் வாழ்ந்து வந்ததாக டெபஜித் தத்தா குறிப்பிடுகிறார்.
அந்த பாம்பின் படிமத்திற்கு “வாசுகி இணடிகாஸ்” என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த பெயர் தான் தற்போது, விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்து புராண இதிகாசங்களில் மிகப்பெரிய பாம்புகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஒரு பாம்பு வாசுகி என குறிப்பிடப்படுகிறது. அது ஒரு பெண் பாம்மை குறிக்கிறது.
இந்நிலையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த இந்த பாம்பு, ஆணா, பெண்ணா எனத் தெரியவில்லை.
மேலும் உலகின் பல பகுதிகளில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும், அதிக நீளம் கொண்ட இதுபோன்ற படிமங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை மதத்தோடு தொடர்பு படுத்தப்படவில்லை.
2000 ஆம் ஆண்டில் கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அழிந்துபோன இனமான 42 அடி நீள டைட்டனோ நோவா எனும் பாம்பின் படிமமே இதுவரை உலகின் மிகப்பெரிய பாம்பாக இருந்து வந்தது.
இந்நிலையில் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 50 அடி நீள வாசுகி இண்டிகாஸ் உலகின் மிகப்பெரிய பாம்பாக கருதப்படுகிறது.
இந்த பாம்பு அணகோண்டா போன்ற மலைப்பாம்பு வகையைச் சேர்ந்தவை. எனவே இவை விஷம் அற்றவை.
இறையை, சுற்றி, நசுக்கி கொன்று, விழுங்கும் தன்மை கொண்டவை.
இந்த வகை பாம்புகள் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றி, கடந்த 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்தவை என கூறப்படுகிறது.