நிதான இழப்பு – டொனால்டு டிரம்பை துணை அதிபர் என அழைத்த ஜோபிடன்!

வயது முதிர்வால் தொடர்ந்து, தடுமாறும் அமெரிக்க அதிபர் ஜோபைடன்…
டொனால்டு டிரம்பை துணை அதிபர் என அழைத்ததால் பரபரப்பு…
81 வயதை கடந்ததால் தொடர்ந்து நிதானம் இழந்து பேசி வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
வாஷிங்டனில் நடைபெற்ற 38 நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ கூட்டத்தில், ரஷ்ய அதிபர் புதினை, கொலைக்கார பைத்தியம் என விமர்சித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தனக்கு முழுத் தகுதி இருப்பதாக குறிப்பிட்டார். இதனிடையே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, உக்ரைன் அதிபரை விளாடிமிர் புதின் என அவர் அழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து தனது தவறை திருத்திக் கொண்ட, ஜோ பைடன், செய்தியாளர்கள் சந்திப்பின் போது, துணை அதிபர் கமலா ஹாரிஸ் என்பதற்கு பதிலாக, துணை அதிபர் டொனால்டு டிரம்ப் என குறிப்பிட்டார்.
இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பு பேசிய ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றில், ஒரு கருப்பு இன அதிபரின் கீழ் பணியாற்றும் ஒரு கருப்பின பெண்ணாக தான் இருப்பதாக தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பை எதிர்த்து ஜோபிடன் போட்டியிடுகிறார்.
அதே நேரம் வயது முதிர்வின் காரணமாக அவர் தொடர்ந்து உளறி வருவதால், அவரது உடல்நிலை, மற்றும் மனநிலையை கருத்தில் கொண்டு, அவர் போட்டியில் இருந்து விலக வேண்டும் என சொந்த கட்சியினரே வலியுறுத்தி வருகின்றனர்.
====