விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட காவலருக்கு கன்னத்தில் பளார்!

விமான நிலைய போலீசாரை கன்னத்தில் பளார் என அறைந்த பணிப்பெண்…
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் நடந்த சம்பவம் வைரல்…
தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பணிப்பெண் பரபரப்பு புகார்…
விமான நிலையத்தில் பாதுகாப்புக்கு இருக்கும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை உதவி ஆய்வாளரை பணிப் பெண் ஒருவர் தாக்கிய வீடியோ வைரலாகி வந்த நிலையில், இந்த விவகாரம், சிஐஎஸ்எஃப் படை மற்றும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் இடையேயான மோதலாக உருவெடுத்துள்ளது.
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து தெரிவித்துள்ள ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், தங்களது பெண் ஊழியர், உணவுப் பொருட்களுடன், விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். அவர் உரிய நுழைவுச் சீட்டையும் வைத்திருந்திருந்தார்.
வழக்கமாக ஸ்கீனிங் செய்வார்கள். அதே போல் ஸ்கீனிங் முடிந்த பிறகும், உதவி ஆய்வாளார் அவரை உள்ளே அனுமதிக்காமல், பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த சோதனைகளை மேற்கொள்ள பெண் அதிகாரிகள் இருக்க வேண்டும். ஆனால் அங்கு பெண் அதிகாரிகள் இல்லை.
மேலும் பணி முடிந்து, எனது வீட்டுக்கு வா என்றும் பணிப்பெண்ணை அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பணிப்பெண் அவரை காவல்துறை அதிகாரிகளை தாக்கியுள்ளார். எங்களது ஊழியருக்கு நியாயம் வேண்டும். காவல்துறை அதிகாரி மீது புகார் கொடுத்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம் என ஸ்பைஸ் ஜெட் தெரிவித்துள்ளது.
இதனிடையே சிஐஎஸ்எப் காவல்துறை தரப்பில் இதுகுறித்து கூறும் போது, வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது, அந்த பணிப்பெண் காவல்துறை உதவி ஆய்வாளரை தாக்கியுள்ளார். இதனால் வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த வைரல் வீடியோ விமான பயணிகள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
====