இந்தியா

ஹிலாரி கிளிண்டன் முதல் மைக் டைசன் வரை! மும்பை வந்த உலக பிரபலங்கள்!

உலக அரசியல் தலைவர்கள் முதல் உள்ளூர் நடிகர்கள் வரை…
ஹிலாரி கிளிண்டன், மைக்டைசன், ஜான்செனா என மும்பையில் குவிந்த பிரபலங்கள்….
அம்பானி குடும்ப கல்யாணத்தில் அமர்க்களம்…

அம்பானி குடும்ப கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதிலும் இருந்து பல பிரபலங்கள் மும்பையில் குவிந்துள்ளனர். அவர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளின்டன், அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி, முன்னாள் பிரிட்டன் பிரதமர்கள் டோனி பிளைர், போரிஸ் ஜான்சன், முன்னாள் கனடா பிரதமர் Stephen Harper, முன்னாள் இத்தாலி பிரதமர் Matteo Renzi (மேட்டியோ ரென்சி), மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத், தான்சான்னியா முன்னாள் அதிபர் Samia Suluhu Hassan, முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் Sebastian Kurz உள்ளிட்ட உலக அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதே போல், அமெரிக்க முன்னாள் குத்துச் சண்டை சாம்பியன் மைக் டைசன், அமெரிக்க உலக பிரபலங்களான கார்டிசியன் சகோதரிகள் கிம் மற்றும் கோல், ரெஸ்லிங் பிரபலம் ஜான்செனா, உலகப் புகழ்பெற்ற hairstylist Chris Appleton, உலக டிக்டாக் பிரபலம் அமெரிக்காவின் Julia Chafe உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

திருமணத்தின் போது, உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களான Adele, Drake மற்றும் Lana Del Rey ஆகியோரின் நிகழ்ச்சி இடம்பெறும் எனத் தெரிகிறது.

அடுத்ததாக சாம்சங் சேர்மன் Jay Lee, Lockheed Martin CEO James Taiclet, HSBC Group சேர்மன் Mark Tucker, Aramco CEO Amin Nasser, Morgan Stanley MD Michael Grimes, Adobe CEO Shantanu Narayen, BP CEO Murray Auchincloss, and Temasek CEO Dilhan Pillay உள்ளிட்ட தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதேப் போல,

நரேந்திர மோடி, சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின், மமதா பானர்ஜி, யோகி ஆதித்யா நாத், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட இந்திய அரசியல்வாதிகளும், சாருக்கான், சல்மான்கான், அமீர்கான், அமித்தாப்பச்சன், அக்சய் குமார், தீபிகா படுகோண், ரன்வீர் சிங், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொள்கின்றனர்.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button