உலகம்
காசாவில் இஸ்ரேலின் தற்காலிக ராணுவ தலைமையகம் மீது தாக்குதல் – ஹமாஸ் அறிவிப்பு!

காசாவுக்குள் புகுந்துள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள், வடக்கு மற்றும் தெற்கு காசாவை பிரிக்கும் ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளனர். அந்த இடத்தை அவர்கள் Netzarim Corridor என அழைக்கின்றனர். இங்கு இஸ்ரேல் ராணுவத்தின் கமாண்ட் மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு செயல்பட்டு வந்தது.
2005 ஆம் ஆண்டு, காசாவில் இருந்து இஸ்ரேல் படைகளை ஹமாஸ் விரட்டுவதற்கு முன்பும் அதே இடத்தில் இந்த மையம் செயல்பட்டு வந்தது. தற்போது, மீண்டும் காசாவுக்குள் புகுந்து அந்த இடத்தில் கட்டுப்பாட்டு மையத்தை அமைத்துள்ளனர்.
இந்த நிலையில், இதனை குறிவைத்து, ராக்கெட் தாக்குதலை ஹமாசின் ராணுவ பிரிவான அல் கஸ்ஸாம் படை நடத்தியுள்ளது. மற்றொரு போராளிக்குழுவுடன் சேர்ந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.
=====