உலகம்

ஹிஸ்புல்லா மூத்த தலைவர் வீர மரணம்! 40 ஆண்டுகள் இஸ்ரேலை எதிர்த்து போரிட்டவர்!

லெபனான், சிரியா, பாலஸ்தீன் பகுதிகளை ஆக்கிரமித்து உருவாகியுள்ள, இஸ்ரேலை எதிர்த்து தனது வாழ் நாள் முழுவதும் போரிட்ட ஹிஸ்புல்லாவின் முக்கியத் தளபதி முகமது நெஹ்மி நாசே வீரமரணத்தை தழுவியுள்ளார். லெபனானின் கடற்கரை நகரமான டயரில் இவர் தங்கிருந்த போது, அவரை குறிவைத்து, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிர் தியாகம் அடைந்துள்ளார்.

1965ஆம் ஆண்டு பிறந்த இவர், 20 வயதை அடையும் முன்பே ஹிஸ்புல்லாவின் ராணுவ பிரிவில் வீரராக சேர்ந்தார்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை லெபனானின் பகுதிகளில் இருந்து வெளியேற்றும் பல போர்களில் இவர் பங்கேற்றுள்ளார்.

ஒரு முறை இஸ்ரேலுக்குள் ஊடுருவிச் சென்று தாக்கும் ஒரு திட்டத்தை ஹிஸ்புல்லா உருவாக்கியது. அதாவது Beit Yahoun என்ற கிராமத்தில் அமைந்துள்ள இஸ்ரேலின் ராணுவ நிலைக்குள் ஊடுருவிச் சென்று தாக்குவது தான் அந்தத் திட்டம். அந்த திட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்திவிட்டு, அங்கிருந்து,திரும்பியவர் முகமது நெஹ்மி.

லெபனானின் தெற்கு பகுதிகளை 18 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலையில், 18 ஆண்டுகள் தொடர்ந்து போரிட்டு, அந்த பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகளை ஹிஸ்புல்லா, கடந்த 2000 மாம் ஆண்டில் விரட்டியடித்தது. இது தான் லெபனானில் ஹிஸ்புல்லாவின் புகழ் ஓங்கியதற்கு முக்கிய காரணம். இந்த 18 ஆண்டு கால போரில் இடம் பிடித்து, பல வீரக் காயங்களை தனது உடலில் சுமந்தவர் முகமது நெஹ்மி.

2006 ஆம் ஆண்டு வெடித்த இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போரின் போதும் , முக்கிய பங்காற்றியவர் முகமது நெஹ்மி.
சிரியா, ஈராக்கின் சில பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளை விரட்டியடித்த அந்தப் பகுதிகளை கைப்பற்றியவர்.
தற்போது, காசாவுக்கு ஆதரவாக அல் அக்ஸா வெள்ளம் போரில், லெபனானில் இருந்து, இஸ்ரேலின் நிலைகளை துல்லியமாக தாக்குவதில் கெட்டிக் காரராக செயல்பட்டு வந்தார்.

ஹிஸ்புல்லா ஜெனரல் ஹசன் நஸ்ருல்லாவிடம் தனது வீர தீர செயலுக்காக பல்வேறு, பதக்கங்களை பெற்றவர்.
இதற்கு முன்பு, Wissam Hassan Tawil மற்றும் Talib Sami Abdallah ஆகிய இரண்டு முக்கிய ஹிஸ்புல்லா தளபதிகள் வீர மரணம் எய்திய நிலையில், தற்போது, 3வது தலைவராக அந்த அந்தஸ்தை முகமது நெஹ்மி பெற்றுள்ளார்.

இதற்கு பதிலடியாக முதல்கட்டமாக இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா ஏவியுள்ளது. தொடர்ந்து இதே போன்ற தாக்குதல்கள் நடத்தப்படும் என யூகிக்கப்படுகிறது.

====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button