சினிமா

43 ஹீரோக்கள்… 4 அரை மணி நேரம்… இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவிக்கும் என நம்பி தோற்ற படம்!

இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவிக்கும் என நம்பி எடுக்கப்பட்ட படம்…
அபிஷேக் பச்சன் முதல் நாகர்ஜுனா வரை 43 ஹீரோக்கள்…
4 அரை மணி நேரமாக ஓடி, படுதோல்வியை சந்தித்த படம் ஒரு பார்வை…

இந்தியாவின் நீளமான திரைப்படம் என்ன தெரியுமா? 43 முன்னணி நடிகர்கள் நடித்தும் மாபெரும் தோல்வி அடைந்தது ஏன் ?

இந்திய வரலாற்றின் உணர்ச்சிபூர்வமான தருணங்களில் ஒன்று கார்கில் யுத்தம். அந்த போர் நடந்த காலங்களில் தேசம் முழுக்க ஒற்றுமை உணர்வு கரைபுரண்டது. ஆனால், அந்த போரினை குறித்து வெளிவந்த திரைப்படம் தோல்வியைத் தழுவியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ?

பிரபல பாலிவுட் இயக்குனர் J. P. டுட்டா இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் LOC கார்கில் என்ற திரைப்படம். இதுவரை தயாரிக்கப்பட்ட இந்திய படங்களிலேயே அதிக நேரம் ஓடும் திரைப்படமாக இது விளங்குகிறது. இந்த படத்தின் அளவு மட்டும் 4 மணிநேரம் 15 நேரம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தில் 43 முன்னணி நடிகர்களும் நடித்திருந்தனர். தற்போது பிரபல நடிகர்களாக உள்ள அஜய் தேவ்கன், சஞ்சய் தத், சைஃப் அலி கான், சுனில் ஷெட்டி, அபிஷேக் பச்சன், நாகார்ஜுனா ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். ஆனாலும், படத்தின் வெற்றிக்கு இது போதுமானதாக அமையவில்லை.

5 OTT Movies On Kargil War That Are A Testament Of Courageஅந்த காலத்திலேயே 33 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் வெளியாகும் போதே பெரும் எதிர்பார்ப்போடு வெளியானது. இந்த திரைப்படமே இந்திய அளவில் அதிக வசூலான படமாக இருக்கும் என்றெல்லாம் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது.

அதன்படி படம் திரையரங்குகளில் வெளியானதும் படத்துக்கு பெரும் வரவேற்பு இருந்தது. முதல் சில நாட்கள் அரங்கம் நிறைந்த காட்சிகளாகவும் அமைந்து திரைப்படம் மாபெரும் வெற்றியை நோக்கி சென்றது.

ஆனால், இது எல்லாம் முதல் வாரம் மட்டுமே. திரைப்படத்தை பார்த்தவர்கள் இதனை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். பத்திரிகைகளிலும் நெகட்டிவான விமர்சனத்தையே இந்த திரைப்படம் பெற்றது.

நாள் செல்ல செல்ல படத்துக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் குறையத்தொடங்கியதால் திரையரங்கில் இருந்து இந்த திரைப்படம் விரைவில் நீக்கப்பட்டது. இறுதியில் படத்தின் பட்ஜெட் தொகையை கூட மீட்க முடியாமல் LOC கார்கில் திரைப்படம் ரூ.31.60 கோடி மட்டுமே ஈட்டி தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டத்தை கொடுத்தது.

இந்த திரைப்படத்தின் தோல்வி கரண்நாத், அர்மான் கோஹ்லி, புரு ராஜ்குமார் ஆகிய அக்கால பிரபல நடிகர்களை திரைத்துறையில் இருந்தே காணாமல் ஆக்கியது. இயக்குனர் J. P. டுட்டாவும் இந்த படத்தின் தோல்விக்கு பின்னர் இரண்டு திரைப்படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த திரைப்படத்தின் தோல்விக்கு அதன் அதிக நீளம் முக்கிய காரணமாக கூறப்பட்டது.

இதனால் அடுத்து வந்த திரைப்படங்கள் தங்கள் படத்தின் நீளத்தை குறைத்துக்கொண்டன. மேலும் , நட்சத்திர நடிகர்கள், புகழ்பெற்ற போர் நினைவுகள் மட்டுமே படத்தின் வெற்றிக்கு போதுமானதாக அமையாது என்ற பாடத்தையும் இந்த திரைப்படம் கற்றுக்கொடுத்தது. அந்த வகையில் பெரிய பட்ஜெட் படத்துக்கு இந்த LOC கார்கில் திரைப்படம் பாடமாக அமைந்தது.
==============

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button