இந்தியா

காலடி மண்ணை எடுத்து நெற்றியில் பூசினால் நோய்கள் தீரும்” மரணத்திற்கு காரணமாக அமைந்த நம்பிக்கை!

தனது காலடி மண் மரணத்தை குணமாக்கும் என பிரசங்கம் செய்து வந்த போலே பாபா…எடுக்கச் சென்றவர்கள் மண்ணோடு மண்ணான சோகம் உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், இந்த நிகழ்வுக்கு முக்கிய காரணம், பாபாவின் காலில் உள்ள மண் புனிதமானது என பக்தர்கள் நம்பியது தான் என்ற தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தனது வாகனத்தில் ஏறுவதற்கு முன்பு அவரது காலில் உள்ள மண்ணை, எடுக்க வேண்டும் என்பதற்காக முண்டியடித்து கீழே குணிந்த பக்தர்கள் மீது பின்னால் வந்தவர்கள் ஏறி மிதித்துச் சென்றுள்ளனர்.தனது காலடி மண்ணை எடுத்து, நோய் வாய் பட்டவர்களின் நெற்றியில் பூசினால், நோய் குணமாகும் என அவர் கூறி வந்துள்ளார். இதனால் அவர் எங்கு சென்றாலும், அவரது காலடி மண்ணை எடுக்க பக்தர்கள் போட்டி போட்டுள்ளனர். இங்கும் அந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அவர் தன்னை கடவுள் ஹரியின் அவதாரம் என்றும் தனது மனைவியும் ஒரு பெண் அவதாரம் என பக்தர்களிடம் பிரச்சாரம் செய்து வந்துள்ளார்.மேலும் வெறும் தண்ணீரை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி வந்துள்ளார்.பிற சாமியார்களை போல், பெரிய தாடி, தலைமுடி, குங்குமம், திருநீறு, காவி உடை இப்படியெல்லாம் இல்லாம், வெள்ளை நிற கோட், சூட், கூலிங் கிளாஸ் கண்ணாடி, என பந்தாவாக பவனி வந்துள்ளார். இவரது ஆசிரமம் மணிப்பூரி நகரம் அருகே சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button