Uncategorized

மக்மூத் அப்பாஸை ஆதரிக்கும் அமெரிக்கா, ஏன் ஹமாஸை ஆதரிப்பதில்லை? எப்படி உருவானது ஹமாஸ்?

பெரும் பெரும் அரசியல் தலைவர்களையே தங்களது தலையாட்டி பொம்மைகளாக மாற்றி, விளையாட்டு காட்டி வந்த இஸ்ரேலை பிடித்த ஒற்றைத் தலைவலி ஹமாஸ்.யாரை எங்கே அடித்தால் விழுவார்கள் என நன்றாக தெரிந்த இஸ்ரேல், ஹமாஸை பல முறை அடித்தும், பலன் இல்லை. அது தொடர்ந்து எழுந்து வருவது, புரியாத புதிர்.

எகிப்தில் தொடங்கப்பட்ட முஸ்லீம் சகோதரத்துவ இயக்கத்தில் இருந்து பிரிந்து 1987 ஆம் ஆண்டு ஹமாஸ் உருவானது.
ஓஸ்லோ ஒப்பந்தம் பாலஸ்தீனியர்களுக்கு கொடுத்த ஏமாற்றம் ஹமாசுக்கு உந்துதலை கொடுத்தது. தீவிர இஸ்ரேல் எதிர்ப்பால், பாலஸ்தீனியர்களிடம் அதிக செல்வாக்கு பெற்ற அமைப்பாக மாறியது.ஆனால் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேலின் ஆதரவு இந்த அமைப்புக்கு கிடைக்கவில்லை. மேலும் அவர்கள் இந்த அமைப்பை தடை செய்து, பயங்கரவாத அமைப்பாக அறிவித்தனர்.

அதே நேரம் அவர்கள் யாசர் அரபாத்தின் ஃபதா அமைப்பை ஆதரித்தனர். அரபாத் மறைவுக்கு பிறகு, மக்மூத் அப்பாஸ் அதன் தலைவரானார்.அமெரிக்கா, இஸ்ரேலின் திட்டங்களுக்கு அனுசரித்து போகின்றவர் என்பதால், அப்பாஸ் பாலஸ்தீன தலைவராக உலக நாடுகளின் அங்கீகாரத்தையும் பெற்றார். இப்போது வரை பெற்று வருகிறார்.
இவரைத் தான் சவுதி அரேபியா உள்ளிட்ட கிங்டம் (Kingdom) மற்றும் ஷேக்டம் (Sheikdom) ஆட்சியாளர்கள் ஆதரித்து வருகின்றனர். ஆனால் இவரால் பாலஸ்தீனியர்களிடம் முழுமையான அங்கீகாரத்தை பெற முடியவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button