ஹமாஸ் அமைப்பை வீழ்த்த முடியாது – இஸ்ரேல் ராணுவம் வெளிப்படையாக அறிவிப்பு

ஹமாஸ் அமைப்பை வீழ்த்த முடியாது என இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் வெளிப்படையாக அறிவித்தால், அந்நாட்டில் பெரும் குழப்பம் வெடித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்துக்கும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும் நேரடியாக மோதல் வெடித்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியில் ஹகேரி கூறியதாவது, ஹமாஸை அழிக்கப் போகிறோம் என கூறுவது, மக்களின் கண்களில் மண்ணை தூவுவது போன்றதாகும். ஹமாசுக்கு இணையான ஒரு மாற்று சிந்தாந்தத்தை முன் வைக்காவிட்டால், போருக்கு பிறகும் ஹமாஸ் நீடிக்கும். ஹமாஸ் என்பது ஒரு கருத்தியல். அந்த கருத்தியலை நம்மால் அழிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ராணுவ செய்தித் தொடர்பாளரின் இந்த கருத்தை உடனடியாக மறுத்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸை அழிப்பது என்ற லட்சியத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
காசா மீதான போரால் இதுவரை 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளது. ஆனால் போர் இலக்குகளை 9 மாதங்கள் ஆகியும் இன்னும் இஸ்ரேலால் அடைய முடியவில்லை. உலக நாடுகளாலும், இஸ்ரேலை கட்டுப்படுத்த முடியவில்லை.
===