பள்ளிக் கூட பீஸ் கட்ட கூட காசு இல்லை! இன்று ரூ. 44 கோடிக்கு பங்களா!

சாப்பிட காசு இல்லாமல் 3 ரூபாய்க்கு பார்லே ஜி பிஸ்கட் சாப்பிட்டு உயிர் வாழ்ந்த இளம் நடிகர்…இன்று 44 கோடி ரூபாய்க்கு சொகுசு பங்களா…கடும் சோதனைகளுக்கு மத்தியில் நடிப்பில் சாதித்து காட்டிய ஜோதிகா பட நடிகர்…
ஸ்ரீ காந்த் என்ற பாலிவுட் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இதில் ஜோதிகா நடித்துள்ளார். இந்த படத்தின் நாயகன் தான் ராஜ்குமார் ராவ்.
சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு, குர்கானில் இருந்து மும்பைக்கு வந்தவர். இவரது தந்தை ஒரு கடைநிலை அரசு ஊழியர். இதனால் பள்ளிக் கட்டணத்தை கூட சில நேரங்களில் இவரால் கட்ட முடியவில்லையாம்.மும்பைக்கு வந்த இவர் வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் கடும் கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார். ஒரு முறை கையில் வெறும் 13ரூபாய் மட்டுமே இருந்த நிலையில், அதனை வைத்து ஹோட்டலுக்கு போய் சாப்பிட முடியாது என்பதால், 10 ரூபாய்க்கு புரூட்டி பானமும், 3 ரூபாய்க்கு பார்லே ஜி பிஸ்கட்டும் சாப்பிட்டு, அன்றைய நாளை கடத்தி இருக்கிறார்.
LSD என்ற திரைப்படத்தில் இவருக்கு முக்கிய வேடம் கிடைத்த நிலையில், அந்த படம் பெரும் வெற்றி பெற்றது. அதற்கு பிறகு மேலும் சில படங்களில் அடுத்தடுத்து வெற்றியை ஈட்டினார். இதனால் முக்கிய பாலிவுட் பிரபலமாக உயர்ந்தார்.
அனுராக் காஷ்யப்பின் மாபெரும் வெற்றித் தொடரான கேங்ஸ் ஆஃப் வஸேப்பூர் வெப் தொடரிலும் இடம்பெற்றார்.
அதற்கு பிறகு சிறிய பின்னடைவுகளை சந்தித்த ராஜ்குமார் ராவ், தற்போது, ஸ்ரீ காந்த் படத்தின் மூலம் மீண்டும் வெற்றி ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.
நடிகை பத்ரலேகா என்பவரை திருமணம் செய்து கொண்ட ராஜ்குமார் ராவ் தற்போது, மும்பையின் ஜுஹூ பகுதியில் வசிக்கிறார்.நடிகை ஸ்ரீ தேவியின் மகளான ஜான்வி கபூரிடம் இருந்து சொகுசு பங்களாவை 44 கோடி ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கியுள்ளார்.அவர் வைத்துள்ள ஆடி Q7 காரின் விலை 80 லட்சம் ரூபாய்,
Mercedes Benz CLA 200 காரின் விலை சுமார் 38 லட்சம் ரூபாய், அவரது harley davidson fat bob பைக்கின் விலை 18 லட்சம் ரூபாய் ஆகும்.ஒரு காலத்தில் வாடகை அறையில், நண்பர்களுடன் சேர்ந்து, படுக்க படுக்கை கூட இல்லாமல் தரையில் படுத்து உறங்கிய ராஜ்குமார் ராவ் தான் இன்று, இத்தனை சொகுசுகளை தனது நடிப்புத் திறமையின் மூலம் பெற்றுள்ளார்.