Flop நாயகன் அக்ஷய் குமார்! 250 கோடி நட்டம்! இந்திய அளவில் முதல் நஷ்ட நாயகனாக உருவானார்!

ரூ. 250 கோடி நஷ்டமடைந்த அக்ஷய் குமாரின் திரைப்படம்…இந்திய அளவில் அதிக நஷ்டமடைந்த ஹீரோவானார்…
தொடர்ந்து 7வது Flop படம் கொடுத்து அதிர்ச்சி…கடந்த வாரம் வரை, நஷ்டமடைந்த இந்திய திரைப்படங்களில் ஆதிபுருஷ் முதல் இடத்தில் இருந்த நிலையில், தற்போது, அந்த இடத்தை அக்ஷய் குமார், நடித்த Bade Miyan Chote Miyan திரைப்படம் பிடித்துள்ளது.
அலி அப்பாஸ் ஜாபர் இயக்கிய இந்த படத்தில் டைகர் ஷரோப். பிருத்விராஜ், சோனாக்ஷி சின்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுமார் 350 கோடியில் உருவான இந்தப் படம் வெறும் 107 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.
எனவே 250 கோடி ரூபாய் வரை இந்த படம் நஷ்டமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.அக்ஷய் குமார் பாலிவுட்டில் தொடர்ந்து பிரமாண்ட படங்களில் நடித்து வந்தாலும், தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.
இதுவரை அவர் நடித்த 7 பிரமாண்ட படங்கள் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்துள்ளன. இதனால் அவரது மார்க்கெட் கடுமையாக சரிந்துள்ளது.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹாலிவுட்டுக்கு போட்டியாக பிரமாண்ட படங்கள் தயாரிக்கப்பட்டாலும், பெரும்பாலான படங்கள் தோல்வியில் முடிந்து வருகின்றன.அதே நேரம் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் கேரள திரைப்படங்கள் அதிக வசூலை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.