90,000 லெபனானியர்கள் வெளியேற்றம் – இஸ்ரேல் தீவிரத் தாக்குதல்!

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்களால், தெற்கு லெபனானில் இருந்து, 90,000 மக்கள் வெளியேறியுள்ளனர். வியாழக்கிழமை மாலை யாரின், ரம்யாஹ், அல் ஜெபைன், தைர் ஹர்ஃபா, ஆகிய பகுதிகள் மீது இஸ்ரேல் குண்டு வீசியுள்ளது.
ஹிஸ்புல்லா ராணுவ தளங்களை குறிவைத்து இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடங்கிய இந்தத் தாக்குதல்களால் லெபனானின் தெற்கு பகுதியில் இருந்து இதுவரை சுமார் 90,000 மக்கள் தங்கள் வீடுகள், நிலங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதே போல் ஹிஸ்புல்லாவின் தாக்குதல்களுக்கு பயந்து, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடிமக்களும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர்.
ஹிஸ்புல்லா செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மட்டும் ஒரே நேரத்தில், 40 மற்றும் 30 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் வீசி தாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
=====