உலகம்

செவ்வாய்கிழமை ஒரே நாளில் 8 நடவடிக்கைகள்! ஹிஸ்புல்லா விளக்கம்!

ஒரே நாளில் 8 நடவடிக்கைகளை மேற்கொண்ட ஹிஸ்புல்லா…
இஸ்ரேல் தரப்பில், கடும் உயிர்ச்சேதம் ஏற்படுத்தியுள்ளதாக தகவல்…

இஸ்ரேலின் கோலானி படைப்பிரிவின் command headquarters மீது ஆள் இல்லா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளது ஹிஸ்புல்லா. இந்த தாக்குதல் துல்லியமான ஒன்று எனவும், இலக்கு சரியாக தாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. இதில் இஸ்ரேலிய படையினர் நிச்சயம் உயிரிழப்பு, அல்லது காயங்களை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த வீடியோவும் வெளியாகியுள்ளது.

2வதாக Sahel படைப்பிரிவு headquarters மீது Falaq rockets களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. 3வதாக இஸ்ரேலின் al-Marj ராணுவ தளம் மீது Burkan rocket ஒன்றை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தங்களது ஆயுதம் இலக்கை சரியாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4வதாக Golani படைப்பிரிவின் battalion command headquarters மீது அமைந்துள்ள Ramim ராணுவ பாசாறை மீது தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்தியுள்ளது. 5வதாக ஏற்கனவே பலமுறை தாக்குதலுக்கு உள்ளான Kiryat Shmona ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் மீது 20க்கும் மேற்பட்ட Katyusha rocketகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவும் வெளியாகியுள்ளது.

6வதாக al-Semmaqa பகுதியில் குழுமியிருந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினர் மீது நேரடியாக artillery shells தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தங்களது ஆயுதம், இஸ்ரேல் படையில், உயிரிழப்புகள் மற்றும் காயத்தை நிச்சயம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7வதாக Birket Risha பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ராடர் கண்காணிப்பு மையம் மீது guided missiles மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த பகுதி அழித்தொழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8வதாக இஸ்ரேலின் al-Assi ராணுவத் தளத்தில் படையினரின் செயல்பாடு கண்டறியப்பட்டதையடுத்து, அதன் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இலக்கு சரியாக தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா வீரர் Sadeq Atef Atwi அல் குத்ஸ் மீட்புப் போரில் வீர மரணம் அடைந்துள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

காசா மக்களுக்காக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் ஹிஸ்புல்லா, இதுவரை மூத்த கமாண்டர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button