கடைசி 24 மணி நேரத்தில் 58 அப்பாவி பாலஸ்தீனியர்கள் பலி!

காசா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளின் தாக்குதல் 272வது நாளாக நீடித்து வருகிறது. இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,011 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 87,445 ஆக அதிகரித்துள்ளது.
கடைசி 24 மணி நேரத்தில் மட்டும் 58 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 178 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அல் சுஜேயா பகுதியை கடந்த 5 நாட்களாக முற்றுகையிட்டு இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் கடந்த 5 நாட்களாக சிக்கியுள்ள பெண்கள், குழந்தைகளுக்கு உணவு, குடிநீர் இல்லை.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கு, அப்பகுதிக்குள் ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாத வாறு இஸ்ரேல் தாக்கி வருகிறது. இதனால் இடிபாடுகளில் சிக்கியவர்களின் நிலை மோசமாக உள்ளது. அவர்கள் அணுஅணுவாக உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளில் இருந்து வரும் குரல்களை கேட்க முடிந்தவர்களால் கூட, உள்ளே இருப்பவர்களை வெளியே கொண்டு வர முடியாதவாறு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் மனிதாபிமானமற்ற தாக்குதல்களை தொடத்துள்ளன.
=====