சினிமா

ஒரே மாதத்தில் பல கோடி மதிப்புள்ள 3 சொத்துக்கள் – தமன்னா காட்டில் மழை!

தமிழ் படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தமன்னா…
சொந்த ஊரான மும்பையில் சொத்துக்களை வாங்கிக் குவித்து அமர்க்களம்…
ஒரே மாதத்தில் பல மதிப்பிலான 3 சொத்துக்கள்…

மும்பை மேற்கு அந்தேரியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் 2197 சதுர அடி நிலத்தை தமன்னா 24 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி மேலும் 2 சொத்துக்களை வாங்கியுள்ளார். மும்பை ஜுஹு பகுதியில் பிரைம் லோகேஷனில் 6605 சதுர அடி வாங்கியுள்ளார்.

இதில் இருந்து அவருக்கு மாதம் 18 லட்சம் ரூபாய் மாத வருமானம் வருவதாக கூறப்படுகிறது. மேலும் மேற்கு அந்தேரியில் 3 குடியிருப்புகளை வாங்கியுள்ளார். மேலும் தமன்னா ஜெம்ஸ் அன்ட் ஜூவல்லரி லிமிடெட் என்ற பெயரில் நகை நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தின் பெயரிலேயே பல சொத்துக்களை வாங்கி வருவதாக கூறப்படுகிறது. கேடி படத்தில் தமிழில் அறிமுகமான தமன்னா, கல்லூரி திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறியப்பட்டார். சில லட்சங்களில் தொடங்கிய இவரது சம்பளம் தற்போது ஒரு திரைப்படத்திற்கு 4 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக சொல்லப்படுகிறது.

இதுவரை தமிழ் தெலுகு இந்தி உள்ளிட்ட மொழிகளில் 80 திரைப்படங்களில் நடித்திருந்தலாலும் இப்போது வரை நடிக்க தெரியாத நடிகை என்று ரசிகர்களால் கிண்டல் செய்யப்படுபவர். மும்பையில் பிறந்த அவர் பஞ்சாபி சிந்தி குடும்பத்தை சேர்ந்தவர். தற்போது அவருடைய சொத்து மதிப்பு தோராயமாக 120 கோடி ரூபாய்.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button