உலகம்

இஸ்ரேல் மீது 3 முக்கியத் தாக்குதல்கள் – ஹிஸ்புல்லா தகவல்!

இஸ்ரேலின் Ruwaisaat al-Alam ராணுவத் தளம் மீது ராக்கெட் தொகுப்புகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மிசல்ஸ்கள் மூலம் இந்தத் தாக்குதல் வெள்ளிக்கிழமை தாக்குதல் காலை 9.30 மணியளவில் நடத்தப்பட்டதாகவும், தங்களது ஆயுதம் இலக்கை துல்லியமாக தாக்கி, பெரும் தீ பற்றி எரிந்ததாக தெரிவித்துள்ளது.

லெபனான் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு பதிலடியாக முதன் முறையாக Abirim ஆக்கிரமிப்பு செட்டில்மென்ட் பகுதி மீது Katyusha ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது.

இதே போல் ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய லெபனான் துணை ராணுவமான Lebanese Resistance Brigades படை வடக்கு இஸ்ரேலின் Rahib military site மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனிடையே ஹிஸ்புல்லாவின் தொடர் தாக்குதல்களால் கலீலி பகுதியில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி, தொடர்ந்து, பல மணி நேரம் அபாய எச்சரிக்கை ஒலி ஒலித் கொண்டே இருந்ததாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் ஊடகம் தெரிவித்துள்ளது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button