துணை மாப்பிள்ளைகள் 25 பேருக்கு தலா ரூ. 2 கோடி வாட்ச் – மொத்தம் ரூ. 50 கோடி!

ஆனந்த் அம்பானிக்கு 25 துணை மாப்பிள்ளைகள்…
தலைக்கு 2 கோடி வீதம், ரூ. 50 லட்சத்துக்கு வாட்ச் அன்பளிப்பு…
ரஜினிக்கு கிடைத்ததா? யார் யாருக்கெல்லாம் கிடைக்கவில்லை?
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சன்ட் திருமணத்துக்கு வந்த துணை மாப்பிள்ளைகள் 25 பேருக்கு தலைக்கு 2 கோடி ரூபாய் வீதம், 50 கோடி ரூபாய்க்கு வாட்ச்கள் அம்பானி குடும்பத்தால், பரிசாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த வாட்சுகள் Audemars Piguet நிறுவனத்தின் Royal Oak Perpetual Calendar Luminary editions வாட்ச்கள் என தெரியவந்துள்ளன.
இந்த வாட்ச்கள் 40- மணி நேர power reserve, a 18K இளஞ்சிவப்பு தங்க bracelet, AP folding buckle, மேலும் blue alligator strap, மற்றும் 20 மீட்டர்கள் வரை water resistant போன்ற தன்மைகளை கொண்டவை.
இந்த வாட்சுகளை பெற்றவர்களின் முழுப் பட்டியல் வெளியாகவில்லை. சாருக்கான், ரன்வீர் சிங், தொழிலதிபரும், நடிகை ஜான்வி கபூரின் காதலன் என கூறப்படும் ஷிகர் பக்காரியா உள்ளிட்ட 25 பேருக்கு இந்த வாட்ச் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்தும் இதில் ஒரு வாட்ச்சை பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரம் துணை மாப்பிள்ளை என்று கூறப்படுவதால், அந்த வரிசையில் ரஜினிகாந்த் இடம்பெற்றிருப்பது சந்தேகம் என தெரிகிறது.
ஆனந்த் அம்பானியுடன் ரஜினி காந்த் ஆட்டம் போடும் காட்சிகள் வைரலான நிலையில், அவருக்கும் 2 கோடி வாட்ச் வழங்கப்பட்டதா என்ற சந்தேகங்களை நெட்டிசன்கள் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஆனந்த் அம்பானி குறித்த மற்றொரு சுவாரஷ்யத் தகவலும் வெளியாகியுள்ளது.
வாட்ச் கள் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர் ஆனந்த் அம்பானி. அவர் பல வகையான விலை உயர்ந்த வாட்ச்களை வைத்துள்ளார். அவரது திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியின் போது, மெட்டா சிஇஓ மார்க் சக்கர் பர்க் அவரது மனைவி பிரிசில்லா, ஆனந்த் அம்பானி அணிந்திருந்த வாட்சை பார்த்து வியந்தார்.
அந்த வாட்சின் விலை 15 கோடி ரூபாய் ஆகும். அதனைத் தொடர்ந்து ஆனந்த் மற்றும் அவர் அணியும் வாட்ச் குறித்த செய்திகள் அதிகம் அதிகம் வெளியாகின.
ஆனந்த் அம்பானி தனது திருமணத்தின் போது, 54 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தின் வாட்ச் அணிந்திருந்தார்.
அவர் வைத்துள்ள அனைத்து விலை உயர்ந்த வாட்ச் களின் மொத்த மதிப்பு 250 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.
=======