23 ஆண்டுகளாக தொடர்ந்து Flop படங்கள்! ஆனால் தனுஷ், நயன்தாராவைவிட அதிக சம்பளம் ! 500 கோடிக்கு அதிபதி! எப்படி?

23 ஆண்டுகளாக ஒரு படம் கூட வெற்றி பெறாமல் தொடர்ந்து Flop படங்கள் கொடுக்கும் ஹீரோ.ஆனால் இப்போதும் சம்பளம் படத்திற்கு 15 கோடி ரூபாய்.500 கோடிக்கு அதிபதியான அர்பராஸ் கான்… ஆச்சர்யப்படுத்தும் தகவல்கள்.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது தமிழ் முதுமொழி. ஆனால் இங்கு தம்பி உடையான் படத்திற்கு அஞ்சான் என்பதே சரியாக இருக்கும். ஆம். ஒரு நடிகருக்கு ஒரு படம் Flop ஆனாலே, எல்லாம் தலைகீழாக மாறிவிடும். ஆனால் பிரபல பாலிவுட் நடிகர் அர்பராஸ் கான் விசயத்தில் அப்படி நடக்கவில்லை.
ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்து தொடர்ந்து பிளாப் கொடுத்த அர்பராஸ் கான், அதற்கு பிறகு, ஹீரோ, குணசித்திர நடிகர் என கலந்து நடிக்க ஆரம்பித்தார். குணச்சித்திர வேடங்களில் இவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்றாலும், இவர் ஹீரோவாக நடித்தால் Flop confirm.
அப்படி இருந்தும் இவருக்கு எப்படி வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன என்பது தான் கேள்வி.அதற்கு ஒரே பதில். இவர் வேறு யாருமல்ல. நடிகர் சல்மான் கானின் சகோதரர் என்பது தான்.சல்மான் கானின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அவரது தந்தை சலீம் கான்.
பிரபலம் வாய்ந்த கதாசிரியாரான சலீம் கான் தான், அமித்தாப்பச்சன் முதல் பலரையும் பாலிவுட்டின் மன்னர் ஆக்கியவர்.ஒரு கட்டத்தில் பிறரை வளர்த்து விடுவதற்கு பதிலாக சொந்த மகனை வளர்த்து விட முடிவு செய்தார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியவர் சல்மான் கான்.
அதே நேரம் அவரது சகோதரர் அர்பராஸ் கானால், சல்மானின் உயரத்தை எட்ட முடியவில்லை. அதே நேரம் அவர் வீட்டிலும் முடங்கிக் கிடக்கவில்லை. கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளை பயன்படுத்தத் தொடங்கினார். இதனால் ஹீரோவா இல்லாவிட்டாலும், ஏதாவது ஒரு கேரக்டருக்கு அவரை பயன்படுத்தத் தொடங்கினர்.
இதனால் தனது சம்பளத்தையும் அவர் உயர்த்திக் கொண்டார். இப்போது அவரது சம்பளம் 15 கோடி ரூபாய். லேடி சூப்பர் ஸ்டார் எனப்படும் நயன்தாராவே இன்னும் 10 கோடி ரூபாய் தான் சம்பளம் வாங்குகிறார். தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கூட 15 கோடிக்கும் குறைவான சம்பளமே வாங்குகின்றனர்.
அதிக சம்பளம் வாங்குவதற்கு முக்கிய காரணம் சல்மானின் சகோதரர் என்பதும் தான். இதைத் தான் யானை படுத்தாலும் குதிரை உயரம் என்கின்றனர். 56 வயதான அர்பாஸ் கான், பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவை விவகாரத்து செய்து விட்டு, தன்னை விட 25 வயது குறைவான இளம் பெண் சூரா கான் என்பவரை திருமணம் செய்தார்.
இது அவரது எதிரிகளுக்கு கூடுதல் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியது.