12 போர்க்கப்பல்கள், 3 விமானம் தாங்கிய கப்பல்கள், 4000 கடற்படை வீரர்கள்! இஸ்ரேலுக்காக அனுப்பியுள்ள அமெரிக்கா! மத்திய கிழக்கிற்கு அமெரிக்கா அனுப்பியுள்ள ஆயுதங்கள் என்னென்ன? விரிவான தகவல்!

இஸ்ரேலை காப்பதற்காக அமெரிக்க மிகப்பெரிய அளவில் பல வகையான ஆயுதங்கள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை அனுப்பி வைத்துள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.ஈரான், ஹிஸ்புல்லா, ஏமன் ஹவுத்திப்படைகள், ஈராக் ஆயுதக் குழுக்கள், சிரியா குழுக்கள், பாலஸ்தீன குழுக்கள் என பலமுனை சவால்களை எதிர்கொண்டுள்ள இஸ்ரேல்.இந்நிலையில், யூத நாட்டை காப்பதற்காக அமெரிக்கா முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆயுதங்களை அனுப்பியுள்ளது.அமெரிக்காவின் USS Theodore Roosevelt விமானம் தாங்கிய போர்க்கப்பல் புதன்கிழமை பாரசீக வளைகுடாவில் நிறுத்தப்பட்டது. அந்த கப்பலுடன் சேர்ந்து, The USS Cole, the USS John S. McCain, the USS Daniel Inouye, the USS Russell, the USS Michael Murphy மற்றும் the USS Laboon ஆகிய போர்க்கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதே நேரம் இந்தக் கப்பல்கள் ஹவுத்திப் படைகளின் தாக்குதலுக்கு அஞ்சி, செங்கடலை நெருங்கவில்லை என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.இந்த கப்பல்களோடு சேர்த்து, 4000 ராணுவ வீரர்களையும் அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.ஏற்கனவே USS Wasp என்ற விமானம் தாங்கிய போர்க்கப்பல், இஸ்ரேலுக்கு ஆதரவாக மத்திய கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 846 அடி நீளம், 104 அடி உயரம் கொண்ட இந்த பிரமாண்ட போர் விமானம் தாங்கிய கப்பலில் 66 உயர் அதிகாரிகள் உட்பட 1687 கடற்படை வீரர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் பல்வேறு வகையான 78 போர் விமானங்கள், ஹெலிக்காப்டர்கள், மீட்பு விமானங்கள் இதில் நிறுத்தப்பட்டுள்ளன. 3 ஓடுபாதைகள் உள்ளன.
இதே போல் மற்றொரு போர்க்கப்பலான USS Theodore Roosevelt ஏற்கனவே மத்திய கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 1000 அடி நீளம், 252 அடி உயரம், கொண்ட இந்த பிரமாண்ட போர்க்கப்பலில், 90 பேரழிவு போர் விமானங்களை நிறுத்த முடியும். இந்த கப்பலின் 2007 ஆம் ஆண்டு மதிப்பு சுமார் 38 ஆயிரம் கோடி ரூபாய்.இந்த போர்க்கப்பலை தற்போது திரும்ப அழைத்துள்ள அமெரிக்கா அதற்கு பதிலாக USS Abraham Lincoln என்ற போர்க்கப்பலை மத்திய கிழக்கிற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. எனினும், USS Theodore Roosevelt போர்க் கப்பல் உடனடியாக நாடு திரும்பாது என தெரிகிறது. எனவே 3 விமானம் தாங்கிய போர்க்கப்பல்கள் தற்போது, ஈரானை எதிர்கொள்ள மத்திய கிழக்கில் இருக்கும் என கருதப்படுகிறது.USS Abraham Lincoln போர்க்கப்பலில் உள்ள ஆயுதங்கள் பற்றி பார்க்கலாம். 1092 அடி நீளம், 252 அடி உயரம் கொண்ட இந்த பிரமாண்ட போர்க்கப்பலில், 90 பேரழிவு போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.