முன்னாள் பிரதமர் உட்பட 11 அமைச்சர்கள் தோல்வி! காணாமல் போன ரிஷி சுனக் கட்சி

பிரிட்டன் வரலாற்றில் இதுவரை இல்லாத தோல்வியை தழுவிய ரிஷி சுனக்கின் பழமைவாதக் கட்சி…
முன்னாள் பிரதமர் உட்பட 11 அமைச்சர்கள் தோல்வி…
பிரிட்டன் பழமைவாதக் கட்சி என்பது சுமார் 190 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 1834 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
அதற்கு பிறகு தற்போதைய வடிவம் என்பது 1912ஆம் ஆண்டு அதாவது 121 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. அக்கட்சியின் வரலாற்றில் முதன் முறையாக இப்படி ஒரு படுதோல்வியை சந்தித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் வென்ற 250 இடங்களை தற்போது பறிகொடுத்துள்ளது. இது கட்சியின் பிரதமரும், தலைவருமான ரிஷி சுனக்கிற்கு பெரும் அவமானமாக கருதப்படுகிறது. கேபினட் அமைச்சர்கள் 11 பேர் தாங்கள் போட்டியிட்ட இடங்களில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
குறிப்பாக ரிஷி சுனக்கிற்கு முன்பு பிரதமராக இருந்த Liz Truss பெண் தலைவர் தனது தொகுதியில் படுதோல்வியை சந்தித்துள்ளார். பழமைவாதக் கட்சியின் வாக்கு சதவீதம் 20 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த வாக்குகள் அனைத்தும் புதிதாக தொடங்கப்பட்ட வலது சாரிக் கட்சியான Reform UK என்ற கட்சிக்கு சென்றது தெரியவந்துள்ளது.
இந்தக் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றாலும் 14 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இது ஒரு தீவிர இனவெறி கட்சியாக பார்க்கப்படுகிறது. எதிர்கட்சியான லேபர் கட்சி வரலாறு காணாத வெற்றியை இந்தத் தேர்தலில் பெற்றுள்ளது. முதன்முறையாக லண்டன், வெஸ்ட் மினிஸ்டர் தொகுதிகளை தொழிலாளர் கட்சி கைப்பற்றியுள்ளது.